Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மிகவும் கடினமாக இருந்தது”.. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி.. யுவேந்திர சாஹல் நெகிழ்ச்சி பேச்சு!

டப்ளின்: ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியில் விளையாடியது குறித்து யுவேந்திர சாஹல் பேசியுள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியே வெற்றிகரமாக அமைந்துள்ளது.

சாஹல் சிறப்பான பவுலிங்

சாஹல் சிறப்பான பவுலிங்

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவேந்திர சாஹல் தான். சிறப்பாக பந்துவீசிய சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

சாஹல் விளக்கம்

சாஹல் விளக்கம்

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடியது குறித்து சாஹல் பேசியுள்ளார். அதில், பவுலர்களுக்கு எந்தளவிற்கு சுதந்திரம் வேண்டுமோ அதனை கொடுக்கிறார். இதனை விட முக்கியமான ஒன்று ஹர்திக் மிகவும் பொருமையாக இருந்தது தான். எனது திட்டத்தை செயல்படுத்த முழு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

 பிட்ச்-ன் நிலைமை

பிட்ச்-ன் நிலைமை

தொடர்ந்து அயர்லாந்து களம் குறித்து பேசிய அவர், அயர்லாந்து போன்ற குளிர்ச்சியான களங்களில் பந்துவீசுவது மிகவும் கடினம். நான் ஒரு விரல் ஸ்பின்னராக உணர்ந்தேன். சில சமயங்களில் இங்கு பந்துவீசுவது மிகவும் கடினமான ஒன்று. எனினும் அதற்கு நம்மை தயார் படுத்திக்கொண்டு தான் ஆக வேண்டும்.

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி நாளை மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தனது முதல் தொடரிலேயே வெற்றி பெற்றுக்கொடுத்த பெருமை கிடைக்கும். இதனால் அடுத்த போட்டியிலும் யுவேந்திர சாஹலின் பங்கு பெரும் தேவையாக உள்ளது.

Story first published: Monday, June 27, 2022, 20:18 [IST]
Other articles published on Jun 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+