வெறும் 32 ரன்னுக்கு ஆல்-அவுட்டான இந்திய அணி.. ஜப்பான் பந்துவீச்சில் கதறிய அபிஷேக், சஞ்சு, இஷான்
சானோ: ஜப்பானில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆண்கள் அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு டி20 போட்டியில், இந்திய அணி யாரும் எதிர்பாராத மோசமான பேட்டிங் சரிவைச் சந்தித்தது. மழை காரணமாக தலா 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஜப்பான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து திணறியது.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 30 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். மறுமுனையில் அதிரடி காட்ட முயன்ற மற்றொரு தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் ரன் குவிக்க முடியாமல் திணறி, 6 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 3 ஓவர்களிலேயே வெறும் 14 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. 5 ஓவர் போட்டி என்பதால் முதல் பந்திலிருந்தே சிக்சர் மழை பொழியும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஓவருக்கு 5 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் வரிசையாக வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.திலக் வர்மா 3 பந்துகளில் 1 ரன் எடுத்தார். சிவம் துபே கடைசி பந்தை சந்தித்து 1 ரன் கூட எடுக்கவில்லை. இதை அடுத்து இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
ஜப்பான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான சார்லி 2 விக்கெட்களும், இப்ராஹிம் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தனர். மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என கணிக்கப்பட்டாலும், பலம் வாய்ந்த இந்திய நட்சத்திர பேட்டர்கள் ஜப்பான் பந்துவீச்சில் சரணடைந்தது கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கியது.
பின்னர் இந்திய அணி ஜப்பானை போலவே 5 ஓவர்களையும் சுழற்பந்துவீச்சாளர்களை வைத்தே வீச வைத்தது. பின்னர் கடைசி ஓவரில் 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அக்சர் பட்டேல் 5வது ஓவரை வீசினார். அதில் அவர் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதை அடுத்து இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications

