Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NAM: இந்திய அணி பிளேயிங் XI ? டி20 உலககோப்பை புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்துமா இந்தியா?

டெல்லி: டி20 உலக கோப்பை 2026 தொடரின் 18வது போட்டி, இந்தியா. நமீபியா இடையே வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு இது குரூப் ஏ பிரிவில் இரண்டாவது போட்டியாகும். முதல் வெற்றியையடுத்து, இந்தப் போட்டியிலும் வென்று குரூப் ஏ பிரிவில் தங்களின் முதல் இடத்தை உறுதி செய்ய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி களமிறங்குகிறது.

தங்களின் முதல் லீக் போட்டியில் மும்பையில் அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும், அந்த வெற்றி எளிதானதாக இல்லை. 77 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியாவை, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து மீட்டெடுத்தார். இதன்மூலம் இந்தியா 161/9 ரன்கள் எடுத்தது, இது அமெரிக்காவுக்கு எட்ட முடியாத இலக்காக மாறியது.

மறுபுறம், நமீபியா அணி தங்களின் தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்திடம் ஏமாற்றமளிக்கும் தோல்வியைச் சந்தித்தது. பிப்ரவரி 10 அன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த நமீபியா, 156/8 என்ற ஸ்கோரை எடுத்தது. பந்துவீச்சில் கோட்டைவிட்டதால், நெதர்லாந்து 157 ரன்கள் இலக்கை 18 ஓவர்களுக்கு முன்பே 7 விக்கெட் வித்தியாசத்தில் கடந்தது.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவும் நமீபியாவும் இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அது நவம்பர் 8, 2021 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பை போட்டியாகும். அந்த மோதலில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நமீபியாவுக்கு எதிரான தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

தற்போது ஏ பிரிவில் 2 வெற்றியை பெற்று பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. இதனால், இந்தப் போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதலிடத்தை பிடிக்க வேண்டிய உத்வேகத்தில் சூர்யகுமார் தலைமையிலான வீரர்கள் உள்ளனர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் திலக் வர்மா டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நமீபியாவுடனான போட்டிக்குத் தயாராக இருப்பதாகவும், தேர்வு செய்யப்படுவார் என்றும் உறுதிப்படுத்தினார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அபிஷேக் தற்போது நலமுடன் இருக்கிறார். ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் டி20 உலகக் கோப்பை அணியுடன் டெல்லியில் இணைந்து, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பயிற்சி மேற்கொண்டார்.

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறக்க வாய்ப்புள்ள உத்தேச XI: இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.

நமீபியா உத்தேச XI பின்வருமாறு அமையலாம்: லோரென் ஸ்டீன்காம்ப், ஜான் ஃபிரைலிங்க், ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன், கெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), ஜே.ஜே. ஸ்மிட், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), டிலான் லீச்சர், ரூபன் ட்ரம்பல்மேன், வில்லெம் மைபர்க், பெர்னார்ட் ஷோல்ட்ஸ், மேக்ஸ் ஹெய்ங்கோ.

Story first published: Wednesday, February 11, 2026, 19:46 [IST]
Other articles published on Feb 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+