Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் நீக்கம்? சஞ்சு சாம்சனுக்கு அடித்த ஜாக்பாட்.. பிளேயிங் 11 என்ன?

டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் உடல்நிலை இன்னும் சீராகாததால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அபிஷேக் சர்மாவுக்கு என்னாச்சு?

அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்ட அபிஷேக் சர்மா, இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. இது குறித்துப் பேசிய இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், "அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் வயிற்றுப் பிரச்சனை உள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. அவர் குணமடைவார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

India vs Namibia T20 World Cup 2026 Sanju Samson Likely to Replace Abhishek Sharma in Predicted Playing XI for Delhi Clash

ஒருவேளை வியாழக்கிழமைக்குள் அவர் உடல்தகுதி பெறவில்லை என்றால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்டது. இது சஞ்சு சாம்சனுக்குத் தன்னை நிரூபிக்கக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

வாஷிங்டன் சுந்தர் வருகை

காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், தற்போது முழு உடல் தகுதியுடன் டெல்லியில் அணியோடு இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் அணிக்குத் திரும்பியிருப்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் வலு சேர்க்கும்.

பும்ராவுக்கு ஓய்வு?

வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இன்னும் முழுமையாகப் பந்துவீச்சுப் பயிற்சியைத் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவருக்குப் பதிலாகக் களமிறங்கிய முகமது சிராஜ் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, நமீபியா போன்ற சிறிய அணிக்கு எதிராக பும்ராவுக்குக் கூடுதல் ஓய்வு அளித்துவிட்டு, சிராஜையே தொடரச் செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாகச் சரிந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியது. 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாகப் போராடித்தான் அணியைக் காப்பாற்றினார். நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

நமீபியாவுக்கு எதிரான உத்தேச இந்திய அணி:

சஞ்சு சாம்சன் (அபிஷேக் சர்மா உடல்தகுதி பெறாத பட்சத்தில்), இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல், ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, முகமது சிராஜ்.

Story first published: Tuesday, February 10, 2026, 21:19 [IST]
Other articles published on Feb 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+