Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NEP ஆசிய போட்டி - இந்தியாவின் பிளேயிங் லெவன் என்ன? எந்த சேனலில் பார்ப்பது? எத்தனை மணிக்கு?

ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் நாளை விளையாடுகிறது. தரவரிசை பட்டியலில் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்திய அணி முதல் காலிறுதி ஆட்டத்தில் நேபாள் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது. இதில் உள்ள ஒரு பிரச்சனையை என்னவென்றால் மைதானத்தின் அளவு மிகவும் சிறியது.

India vs nepal cricket Asian games - India playing xi and match timings where to watch it

இதனால் சாதாரண அணி வீரர்கள் கூட 20 ஓவரில் 250 முதல் 270 ரன்கள் அடித்து விடுகிறார்கள். நேபாள் வீரர் ஒருவர் 8 பந்தில் எல்லாம் அரைசதம் அடித்த காமெடியும் கூட இந்த மைதானத்தில் நடைபெற்றிருக்கிறது.
இப்படி என்றால் இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஷ்வால், ரிங்கு சிங்,சிவம் துபே போன்ற வீரர்கள் எல்லாம் எப்படி அடிப்பார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் தான் மிகவும் பாவம். பந்தை சும்மா தொட்டாலே பவுண்டரிக்கு சென்று விடும். இந்திய அணியில் ஆவேஸ் கான், முகேஷ் குமார்,ஆர்ஸ்தீப் சிங், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர் சேபாஷ் அஹமது போன்ற சுழற்பந்துவீச்சாளர்களும் அணியில் இருக்கிறார்கள். இந்திய அணி தங்களுடைய இரண்டாம் தர வீரர்களை தான் இந்த தொடருக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் மிகவும் திறமையான வீரர்களாக திகழ்கின்றனர்.

ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டத்தில் அவர்கள் என்ன சாதனைகளை உடைக்க போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு தொடங்கும் மேலும் இந்த போட்டியை இலவசமாக சோனி 1 சோனி 5 போன்ற தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஜியோ டிவி அல்லது சோனி லைவ் போன்ற ott ஆப் மூலமாகவும் பார்க்கலாம்.

இந்தியா பிளேயிங் லெவன் - 1. ருதுராஜ் கெய்க்வாட், 2, ஜெய்ஸ்வால், 3, ராகுல் திரிபாதி, 4, திலக் வர்மா, 5, ரிங்கு சிங், 6, சிவம் துபே, 7, ஜித்தேஷ் சர்மா, 8, வாசிங்டன் சுந்தர், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான் / முகேஷ் குமார், 11, ரவி பிஸ்னாய்

Story first published: Monday, October 2, 2023, 17:52 [IST]
Other articles published on Oct 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+