For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணியில் மாற்றம்.. கவாஸ்கர் கூறிய யோசனை.. இவருக்கு வாய்ப்பு கொடுங்க ?

சிட்னி : நெதர்லாந்துக்கு எதிரான இந்திய அணியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டி இந்திய நேரப்படி வியாழக்கிழமை மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது. நெதர்லாந்தின் பேட்டிங் பலமாக இருப்பதால் இந்திய அணி அதனை எளிதாக எண்ணி விட முடியாது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

டி20 கிரிக்கெட்டில் இதுவரை நெதர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது கிடையாது. இதனால் அந்த அணி எப்படி செயல்படும் என்று இந்திய வீரர்களுக்கு தெரியாதது பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது போல் தெரிகிறது. இதனால் அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

ஆனால் யாருக்கும் ஓய்வு வழங்க திட்டம் இல்லை என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஹர்திக் பாண்டியாவுக்கு லேசான காயம் இருந்தால் கூட அவரை நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வைக்க கூடாது.ஏனென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கிய ஆட்டம் ஒன்று இருக்கிறது.

ஓய்வு வழங்கலாம்

ஓய்வு வழங்கலாம்

அது இந்தியாவுக்கு பெரிய போட்டி.இதனால் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வு வழங்கினால் அவர்களுக்கு ரெஸ்ட் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைக்கான போட்டிக்காக அவர்கள் புத்துணர்ச்சியுடன் தயாராவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எந்த அணியும் சாதாரணமாக எண்ணி விட முடியாது. என்னை பொறுத்தவரை முகமது ஷமி தொடர்ந்து பந்து வீசி பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

தீபக் ஹூடாவை சேருங்கள்

தீபக் ஹூடாவை சேருங்கள்

ஏனென்றால் ஷமி தொடர்ந்து கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இதனால் optional பயிற்சி முகாமில் கூட முகம்மது ஷமி தொடர்ந்து விளையாட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் கூட பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். இதனால் தான் நான் சொல்கிறேன் இளம் வீரர் தீபக் ஹூடாவை நெதர்லாந்துக்கு எதிராக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும்.இதேபோன்று அக்சர் பட்டேல், பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சில் சொதப்பியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2 வீரர்கள் காத்திருப்பு

2 வீரர்கள் காத்திருப்பு

இதனால் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு கடைசி வாய்ப்பாக அது அமையும் என கருதப்படுகிறது.இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்ட அக்சர்பட்ட ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். இதனால் அக்சர் பட்டேல் வைத்து தொடரலாமா இல்லையெனில் சாஹலை இந்திய அணியில் சேர்க்கலாமா என குழப்பத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். இதேபோன்று மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேலும், தனது இடத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Story first published: Wednesday, October 26, 2022, 13:53 [IST]
Other articles published on Oct 26, 2022
English summary
India vs Netherland t20 - sunil gavaskar ask team india to rest hardik and give chance to youngster நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணியில் மாற்றம்.. கவாஸ்கர் கூறிய யோசனை.. இவருக்கு வாய்ப்பு கொடுங்க ?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+