Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs நியூசிலாந்து முதல் அரையிறுதி அ முதல் ஃ வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை?

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் பலப் பரிட்சை நடத்துகின்றன

இந்தப் போட்டியில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். மும்பை வான்கடே மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. இதனால் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

India vs New zealand 1st semi final - All the things you need to know

ஆனால் இந்திய அணி நிர்வாகம் எங்களுக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கடைசி நேரத்தில் கூறி இருப்பதாகவும் இதனை ஐசிசி கண்டித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதன் உண்மை தன்மை தெரியவில்லை. பொதுவாக இந்தியா மீது இப்படி குற்றச்சாட்டு வைக்கப்படுவது முதல் முறை அல்ல.

இதேபோன்று இந்திய அணி இதுவரை ஐசிசி தொடர்களில் நாக் அவுட் ஆட்டங்களில் நியூசிலாந்துக்கு எதிராக வென்றதில்லை. அந்த சாதனையை மாற்றும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாது.

இதே போல் நியூசிலாந்து அணியிலும் மாற்றம் இருக்காது. இந்திய அணி இதுவரை ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் தொடரின் போட்டியில் ஏழு முறை விளையாடியிருக்கிறது. இதில் நான்கு முறை தோல்வியும், மூன்று முறை வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அரை இறுதி போட்டிகளில் தோல்வியை தழுவவில்லை. இன்றைய போட்டியை இலவசமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும். ஒரு வேளை இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக இந்திய அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்று விடும்.

Story first published: Wednesday, November 15, 2023, 13:11 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+