இது சுத்த பொய்.. ஆடுகள விவகாரத்தில் இந்தியா மீது வீண் பழி.. உண்மை என்ன? இதோ ஆதாரம் இருக்கு
மும்பை : ஐசிசி உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் இந்திய அணி ஆடுகளத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்து ஏமாற்றி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதன் உண்மை தன்மை என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
ஐசிசி தொடர்களை பொறுத்தவரை ஆடுகளத்தை தயாரிப்பது ஆடுகளத்தை பராமரிப்பது அனைத்தும் ஐசிசியின் மேற்பார்வையில் தான் நடக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் கடைசி நேரத்தில் ஆடுகளத்தை மாற்றும் முயற்சி எல்லாம் செய்வதற்கு வாய்ப்பே கிடையாது.

ஆனால் நடந்தது என்னவென்றால் ஆடுகளத்தில் புற்கள் அதிகம் அளவு இருந்தது. அந்த புற்களை எப்போதுமே போட்டியின் முதல் நாள் முன்பு தான் ஆடுகள பராமரிப்பாளர்கள் வெட்டுவார்கள். இதுதான் நேற்றும் நடந்தது. ஆனால் இந்தியா கடைசி நேரத்தில் ஆடுகளத்தை மாற்றி விட்டதாக இதனை பொய்யாக திரித்து வெளிநாட்டு பத்திரிகை செய்திகளை பரப்ப தொடங்கிவிட்டன.
இதன் உண்மை தன்மையை ஆராயாமல் பலரும் இதனை பரப்பி வருகிறார்கள். இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தும், இரண்டாவது பேட்டிங் செய்தும், சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் விளையாடி தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வென்றிருக்கிறது. இதனால் அரை இறுதியில் இப்படி ஆடுகளத்தை மாற்றி தான் ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்கு துளியும் கிடையாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியா மீது பொறாமையில் இருக்கும் சில வெளிநாட்டு ரசிகர்கள் தான் இது போன்ற பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஐசிசி விதிப்படி புதிய ஆடுகளத்தில் தான் அரையிறுதி போட்டி நடைபெற வேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் போட்டி நடத்தலாம். ஐசிசி விதிப்படி ஆடுகளமும் பௌண்டரி பகுதிகளும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் விதி. தற்போது இது படி தான் இன்று அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. அது தவிர வேறு எந்த ஒரு ஏமாற்று வேலையும் இந்தியா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications