Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20 போட்டி நடக்குமா? நடக்காதா?.. கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விக்கு விடை வந்தது..முழு விவரம்!

வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் உள்ள ரசிகர்களுக்கு பதில் கிடைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. வெல்லிங்டன் மைதானத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 ஆட்டம்

முதல் டி20 ஆட்டம்

இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகமது ஷமி, போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளனர். இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இந்தியாவின் எதிர்கால அணி விளையாடவுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து தனது முழு பலத்துடன் களமிறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

இந்நிலையில் டாஸின் போதே ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. வெல்லிங்டன் நகரத்தில் திடீரென மழைப்பொழிவு ஏற்பட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. 11.30 மணிக்கு போடவேண்டிய டாஸானது ஒரு மணிநேர்த்திற்கும் மேலாக போடப்படாததால் போட்டி நடக்குமா? இல்லையா? என்பதிலேயே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.

போட்டி நடக்குமா?

போட்டி நடக்குமா?

அவர்களுக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. நியூசிலாந்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவின்படி, அடுத்த 4 முதல் 5 மணி நேரத்திற்கு 90 சதவீதம் மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை காத்திருப்பார்கள். அந்தவகையில் இந்த போட்டிக்கு இந்திய நேரப்படி மதியம் 2.16 மணி வரை காத்திருப்பார்கள்.

ரசிகர்கள் சோகம்

ரசிகர்கள் சோகம்

கூடுதல் நேரத்திற்குள் போட்டி தொடங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதால் முதல் டி20 போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. இரு அணிகளுமே டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. அந்த கவலையை போக்க, இன்று வெற்றிக்காக காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

Story first published: Friday, November 18, 2022, 13:42 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+