Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் போடும் நேரத்தில் இப்படியா?.. இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 நடப்பதில் சிக்கல்.. காரணம் என்ன?

வெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் கடைசி நேரத்தில் ரத்து செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் படு மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் உள்ள மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் டி20 போட்டி

முதல் டி20 போட்டி

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷமி, போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளனர். இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இந்தியாவின் எதிர்கால அணி விளையாடவுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து தனது முழு பலத்துடன் களமிறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

திடீர் சிக்கல்

திடீர் சிக்கல்

இந்நிலையில் இந்த போட்டி நடைபெறுவதிலேயே தற்போது பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. போட்டி நடைபெறும் வெல்லிங்டன் நகரத்தில் இன்று காலை முதலே பலமான மழைபொழிவு ஏற்பட்டு வருகிறது. போட்டியின் போது மழைக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருப்பதால் போட்டி நடக்குமா என்பதிலேயே சந்தேகம் கிளம்பியுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

ஒருவேளை மதிய நேரத்தில் வெயில் சற்று வந்து மழைப்பொழிவு குறைந்தால், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தி முடிக்கப்படும். இதற்காக பிட்ச்-கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி டாஸ் போடப்படுமா? அல்லது போட்டி தாமதமாகுமா? என்ற கவலையில் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

சுப்மன் கில், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட்/ சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார்

Story first published: Friday, November 18, 2022, 11:42 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+