வெல்லிங்டன் : இந்தியா, நியூசிலாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு வெல்லிங்டன் நகரில் தொடங்குகிறது.
சீனியர்கள் இல்லாத நிலையில், முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பிசிசிஐ இந்திய அணியை தேர்வு செய்துள்ளதால், இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஆஸ்திரேலிய மைதானம் என்பதால் எவ்வளவு பெரியதோ, அதற்கு நேற் மாறாக உள்ள மைதானங்கள் நியூசிலதந்தில் அமைந்திருக்கும்.
காரணம், நியூசிலாந்தில் உள்ள ரக்பி மைதானத்திடல தான் பெரும்பாலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். இதனால் பந்தை பார்த்து தூக்கி அடித்தாலே சிக்சர் செல்லும். இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் பாவம் தான். ஆனால் சரியான வெங்தில், அதி வேகத்துடன் வீசினால் விக்கெட்டும் கிடைக்கும். இதனால் டாஸ் வென்றால் முதலில் பந்துவிசி, பிறகு சேஸிங் செய்வது தான் சிறந்தது.

இந்த தொடரில் தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவாரா இல்லை நடுவரிசையில் களமிறங்கவாரா என்று முடிவு எடுக்கப்படவில்லை. இதே போன்று மூன்றாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், 4வது வீரராக சூர்யகுமார் யாதவும் இடம்பெறுவார்கள். கேப்டன் ஹ்ர்திக் பாண்டியா 5வது இடத்தில் களமிறங்குவார்.
6வது இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பண்ட் விளையாடலாம். ஒரு வேலை இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தராமல், இவ்விரு வீரர்களை யாராவது ஒருவரை தொடக்க வீரராக அனுப்பவும் வாய்ப்பு இருக்கிறது. தீபக் ஹூடா அல்லது வாசிங்டன் சுந்தருக்கு பேட்டிங் வரிசையில் 7வது இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 8வது வீரராக ஆர்ஸ்தீப் சிங், 9வது வீரராக புவனேஸ்வர் குமார் மற்றும் 10வது வீரராக முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சாளராக சாஹல் அல்லது குல்திப் யாதவ் இடம்பெறுவார்கள்.
உத்தேச பிளேயிங் லெவன்
1, இஷான் கிஷன் / ரிஷப் பண்ட், 2, சுப்மான் கில், 3, ஸ்ரேயாஸ் ஐயர், 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, ரிஷப் பண்ட் / சஞ்சு சாம்சன், 7, வாசிங்டன் சுந்தர் / தீபக் ஹூடா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, முகமது சிராஜ் / உம்ரான் மாலிக், 11, சாஹல் / குல்தீப் யாதவ்