Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி.. 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 3டெஸ்ட் அட்டவணை

ஆக்லாந்து: இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முழு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1 வரை நடைபெற உள்ளது. இதில் ஐந்து டி20, ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறும்.

கிறிஸ்ட்சர்ச்சில் அக்டோபர் 22 அன்று முதல் டி20 போட்டியுடன் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. இதன் பிறகு, அக்டோபர் 24 அன்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் இரண்டாவது டி20 போட்டி, அக்டோபர் 27 அன்று வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் மூன்றாவது டி20, அக்டோபர் 30 அன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நான்காவது டி20 மற்றும் நவம்பர் 1 அன்று ஹாமில்டனில் உள்ள சேடன் பார்க்கில் ஐந்தாவது டி20 போட்டி நடைபெறும்.

டி20 தொடரைத் தொடர்ந்து, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 4 அன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 7 அன்று வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 10 அன்று ஹாமில்டனில் உள்ள சேடன் பார்க்கிலும் நடைபெறும். இறுதி இரண்டு ஒருநாள் போட்டிகள் மவுண்ட் மவுங்கானுயியில் உள்ள பே ஓவலில் நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

ஐபிஎல் கோப்பையை வென்ற உடன் ஆசிரமத்திற்கு சென்ற விராட் கோலி, அனுஷ்கா சர்மா

ஐபிஎல் கோப்பையை வென்ற உடன் ஆசிரமத்திற்கு சென்ற விராட் கோலி, அனுஷ்கா சர்மா

இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 சைக்கிளில் ஒரு பகுதியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும். நவம்பர் 19 முதல் 23 வரை வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும். அதைத் தொடர்ந்து, நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

நியூசிலாந்தில் இந்தியா இரண்டு டெஸ்ட் தொடர்களை மட்டுமே வென்றுள்ளது. மன்சூர் அலிகான் பட்டோடி தலைமையிலான அணி 1968 இல் 3-1 எனும் கணக்கில் முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பிறகு, எம்.எஸ். தோனி தலைமையில் 2009 இல் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

நியூசிலாந்து மண்ணில் இந்தியா பங்கேற்ற டெஸ்ட் தொடர்களின் முடிவுகள்: 1976 (சமன், 1-1), 1981 (நியூசிலாந்து 1-0), 1990 (நியூசிலாந்து 1-0), 1994 (சமன், 0-0), 1998-99 (நியூசிலாந்து 1-0), 2002 (நியூசிலாந்து 2-0), மற்றும் 2014 (நியூசிலாந்து 1-0). கடைசியாக 2020 இல் நியூசிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்தியா, விராட் கோலி தலைமையில் 2-0 என தோல்வியடைந்தது.

ஐபிஎல் பவர்பிளே விதியை மாற்ற வேண்டும்.. சச்சின் டெண்டுல்கர் யோசனை

ஐபிஎல் பவர்பிளே விதியை மாற்ற வேண்டும்.. சச்சின் டெண்டுல்கர் யோசனை

சமீபத்தில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த பின்னணியில், இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் தங்கள் டெஸ்ட் சாதனையை மேம்படுத்த ஆர்வமாக உள்ளது.

Story first published: Wednesday, June 3, 2026, 13:19 [IST]
Other articles published on Jun 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+