Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணாம்பூச்சி காட்டிய மழை.. இந்தியா Vs நியூசி. ஆட்டம் பாதிப்பு.. 6 மணி நேரத்திற்கு பிறகு வந்த முடிவு

ஹாமில்டன் : இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 12.5 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது.

அதிகாலை இந்திய நேரப்படி ஆறு முப்பது மணிக்கு டாஸ் போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் தாமதமாக டாஸ் வீசப்பட்டு போட்டி தொடங்கியது.

 மழை பாதிப்பு

மழை பாதிப்பு

இதில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். 4.5 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

29 ஓவர்கள் குறைப்பு

29 ஓவர்கள் குறைப்பு

ஆட்டம் வெகுநேரமாக பாதிக்கப்பட்டது. மழை வருவதும் பிறகு செல்வதும் என கண்ணாமூச்சி காட்டியது. இதனை அடுத்து சுமார் நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. அப்போது இரு அணிகளுக்கும் 29 ஓவர்கள் தான் வீசப்படும் என நிர்ணயிக்கப்பட்டது .இன்னிங்ஸ் இடைவெளியில் வெறும் பத்து நிமிடம் மட்டும்தான் ஓய்வுக்கு வழங்கப்படும் எனும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

மழை தாமதத்திற்கு பிறகு தொடங்கிய இரண்டாவது பந்திலேயே கேப்டன் ஷிகர் தவான் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து சூரியகுமார் யாதவும் சுப்மான் கில் ஜோடி சேர்ந்தனர். வழக்கம்போல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 42 பந்துகளில் 45 ரன்கள் விளாசினர். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.முதல் ஆட்டத்தில் சூரிய குமார் யாதவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் அவர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் சேர்த்தார். அதில் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும்.

ஆட்டம் ரத்து

ஆட்டம் ரத்து

இந்திய அணி 12.5 ஓவர்களை எதிர்கொண்டு 89 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டுள்ளது. தற்போது இந்திய நேரப்படி மதியம் 1.05 மணிக்குள் போட்டி தொடங்கினால் ஓவர்கள் மேலும் குறைக்கப்பட்டு 20 ஓவர் ஆட்டமாக நடத்தப்படும். ஆனால் மழை விடாதபடி தெரியவில்லை. இதனால் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Sunday, November 27, 2022, 12:50 [IST]
Other articles published on Nov 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+