லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
லக்னோ : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஞாயிற்றுகிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் தோல்வியை தழுவியால், இன்றைய ஆட்டத்தில் வென்றால் மட்டுமே தொடர் உயிரோட்டமாக இருக்கும்.
லக்னோவில் இதுவரை 5 டி20 போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய அணி 2 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை இந்திய அணி துவம்சம் செய்தது.
சுமார் 1 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அங்கு போட்டி நடைபறுகிறது. இதில் தீபக் ஹூடா, இஷான் கிஷனை தவிர வேறு எந்த வீரரும், இந்த தொடரில் இடம்பெறவில்லை.

மீண்டும் வாய்ப்பு
முதல் டி20 போட்டியில் சொதப்பிய வீரர்களை நீக்கிவிட்டு, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைத்தீர்கள் என்றால், அதனை அப்படியே ctrl + del அழுத்தி அழித்துவிடுங்கள். அப்படி ஒரு நல்ல விசயத்தை இந்திய அணி நிர்வாகம் என்றும் செய்யாது. குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங்கிற்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் வாய்ப்பை கொடுப்பார்.

டாஸ்
வாய்ப்புக்காக காத்திருக்கும் பிரித்வி ஷா, ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் எல்லாம், பெஞ்சை துடைத்துவிட்டு செல்ல வேண்டியது தான். வழக்கமாக டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்து வெற்றி பெறும் பார்முலா இங்கு ஓர்க் அவுட் ஆகாது. இங்க விளையாடிய 5 போட்டிகளிலும், டாஸ் முதலில் வென்று பேட் செய்த அணிகளே வெற்றி பெற்று இருக்கிறது.

சாதகமான சூழல்
ஆடுகளம் நேரம் ஆக, ஆக தோய்வாகி விடும் என்பதையே இது காட்டுகிறது. இதனால் சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இஷான் கிஷன் , தீபக் ஹூடா, ஆர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு இது கடைசியாக வாய்ப்பாக பார்ப்படுகிறது.

பெரிய பொறுப்பு
இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதே போன்று சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டும். இதே போன்று ஆர்ஸ்தீப் சிங்கும், உம்ரான் மாலிக், சிவம் மவி ஆகியோர் ஹர்திக் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.


Click it and Unblock the Notifications