For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி போட்டியிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? 2 முக்கிய மாற்றங்கள் செய்யும் இந்தியா

கிறிஸ்ட்சர்ச் : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நாளை தொடங்குகிறது.

டி20 தொடரை இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

2வது ஒருநாள் போட்டி, மழையால் கைவிடப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியிலாவது மழை குறுக்கிடாமல் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் 38 பந்தில் 36 ரன்கள் அவர் அடித்தார். ஆனால் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 23 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில்,அந்த ஆட்டத்தில் இந்திய அணி 306 ரன்கள் அடித்தும் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீசும் பேட்ஸ்மேனை சேர்க்காததால் தோல்வியை தழுவியது.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்டை நீக்காமல், சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

6வது பவுலர்

6வது பவுலர்

தீபக் ஹூடாவை 6வது பந்துவீச்சாளராக பயன்படுத்தும் முடிவில் மாற்றம் இல்லை என்று பயிற்சியாளர் லட்சுமணன் தெளிவாக அணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசி இருக்கிறார். ஒரு வேளை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால், ரிஷப் பண்ட் அணியில் தொடர்கிறார். சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் தொடர்கிறார்,

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

ஷிகர் தவான், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங், சாஹல்

Story first published: Tuesday, November 29, 2022, 21:00 [IST]
Other articles published on Nov 29, 2022
English summary
India vs New Zealand 3rd odi – Playing xi and Preview கடைசி போட்டியிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? 2 முக்கிய மாற்றங்கள் செய்யும் இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+