Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: திருவனந்தபுரம் கவலைப்படாதீங்க.. சஞ்சு சாம்சன் விளையாடுகிறார்.. டாசில் சூர்யகுமார் கலகல

திருவனந்தபுரம்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நிலையில் சூரியகுமார் பேட்டிங் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம்.

நேற்று நாங்கள் பயிற்சி செய்த போது கடும் பனிப்பொழிவு இருந்தது. உலகக்கோப்பையில் இதே போல் ஒரு சூழல் எங்களுக்கு ஏற்படலாம். அப்போது பவுலர்கள் இதுபோன்ற சூழலில் பந்து வீசி இலக்கை தற்காத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக ஒரு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

நான் ஆடுகள் பணியாளர்களிடம் பேசியபோது 40 ஓவரும் ஆடுகளம் ஒரே மாதிரி செயல்படும் என்று கூறினார்கள். இன்றைய ஆட்டத்தில் அக்சர் பட்டேல்,இசான் கிஷன் ஆகியோர் அணியில் திரும்பி இருக்கிறார். திருவனந்தபுரம் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். சஞ்சு சாம்சன் கண்டிப்பாக இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் செய்கிறார் என்று ரசிகர்களை பார்த்து சூரியகுமார் கூறியவுடன் மைதானத்தில் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பேசிய சூரியகுமார் திலக் வர்மா குறித்து இன்னும் எங்களுக்கு தகவல் வரவில்லை. அவருக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் உலக கோப்பைக்கு முன்பு அனைத்து துறையிலும் சரியாக இருக்கின்றோம். ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு ஒரு பாடத்தை கொடுக்கும்.

அதில் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியை எதிர்நோக்கி செல்ல வேண்டும் என்று சூரியகுமார் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சாண்ட்னர் இன்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய அளவு பனிப்பொழிவு இருக்காது என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் எங்கள் அணியில் நான்கு மாற்றங்களை செய்திருக்கின்றோம். காண்வேக்கு பதில் பின் ஆலன் வந்திருக்கின்றார். இதேபோன்று சாப்மனுக்கு பதில் ஜிமி நீஷம் திரும்பி உள்ளனர்.

இதைப்போன்று கேல் ஜேமிஷன், லோகி பெகுர்சன் ஆகிய நான்கு வீரர்களும் அணிக்கு திரும்பி உள்ளனர்.இந்த நான்கு பேரும் அணிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பு அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என சாண்ட்னர் தெரிவித்தார்.

Story first published: Saturday, January 31, 2026, 18:48 [IST]
Other articles published on Jan 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+