
முக்கியப் போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து என 2 அணிகளுமே தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளன. இதனால் மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். குறிப்பாக இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் கடந்த கால புள்ளி விவரங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை.

புள்ளிவிவரம்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் கடந்த 2007ம் ஆண்டு முதல் தற்போது வரை 17 முறை சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8 முறை நியூசிலாந்து அணியும், 8 முறை இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரே ஒரு போட்டி மட்டும் ரத்தாகிவிட்டது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி வாகை சூடியுள்ளது.

விராட் கோலிக்கு கட்டாயம்
ஆனால் டி20 உலகக்கோப்பை தொடர் அப்படியே நியூசிலாந்துக்கு சாதகமாக உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 2 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஒரு முறை கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 126 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் அந்த இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி 79 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

இந்தியாவுக்கு பாக். நிலைமை
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை நியூசிலாந்தை இந்தியா வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் விராட் கோலி உள்ளார். இதே நிலைமையில் தான் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இருந்தது. அதனை பாபர் அசாம் மாற்றி அமைத்தார். அதே போல இந்தியாவும் செய்யுமா என ரசிகர்கள் எதிபார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











