Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழை...! மழை...! நாட்டிங்ஹாமில் மழையை தவிர ஒன்றுமில்லை..! இந்தியா vs நியூசி. போட்டி தாமதம்

நாட்டிங்ஹாம்:இந்தியா, நியூசி.க்கு எதிரான முக்கிய போட்டி மழையால் தாமதமாகி உள்ளதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பல போட்டிகள், மழை காரணமாக தடைப்பட்டு வருகிறது. அதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

India vs new Zealand match delayed due to rain in Nottingham

தென் ஆப்ரிக்கா,வெஸ்ட் இண்டீஸ், இலங்கை -வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டிகள் மழை காரணமாக ஏற்கெனவே முற்றிலும் கைவிடப்பட்டு ள்ளன. இந் நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்தியா,நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது. அதேபோலவே நியூசிலாந்து ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே தழுவாத இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதால் இந்த போட்டி எதிர்பார்ப்பு எகிறியது.

நாட்டிங்ஹாமில் இந்த போட்டி நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குவதால் 2.30 மணிக்கு டாஸ் போடப்படுவது வழக்கம். நாட்டிங்ஹாமில் மழை பெய்ததால், மைதானம் ஈரப்பதத்துடன் காட்சியளிக்கிறது.

எனவே, 3 மணிக்கு நடைபெற வேண்டிய ஆடுகள சோதனை, மழையின் காரணமாக 3.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மழை நின்றது. அடுத்த ஆடுகள சோதனை இந்திய நேரப்படி 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது.

ஒருவேளை 4.15 மணிக்குப் பின் போட்டி துவங்கினால், ஓவர்கள் குறைக்கப்படும். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் மழை வரக்கூடாது வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.

Story first published: Thursday, June 13, 2019, 15:42 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+