Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு இந்தியர் என் ரெக்கார்டை உடைத்ததை நினைத்து பெருமை.. காலை தொட்டவர் இதயம் தொட்டார்-சச்சின் பாராட்டு

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார்.

மேலும் அதிக ஒரு நாள் சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி அடித்திருக்கிறார். விராட் கோலி சதம் அடித்தவுடன் சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலை குனிந்து நன்றி தெரிவித்தார்.

India vs new zealand sachin tendulkar wish virat kohli for breaking his odi century record

இது குறித்து பேசிய விராட் கோலி தன் ஹீரோ முன் நின்று இந்த சதம் அடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார். இந்த நிலையில் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். இதில் விராட் கோலியை தான் எவ்வாறு முதலில் பார்த்தேன் என்பது குறித்து சச்சின் பகிர்ந்திருக்கிறார்.

அதில் முதல்முறையாக விராட் கோலியை நான் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்டபோது மற்ற சீனியர் வீரர்கள் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும்படி விராட் கோலியை பிராங்க் செய்தார்கள். அதனை விராட் கோலி செய்த போது என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அதன்பிறகு உன்னுடைய திறமையாலும் உத்வேகத்தாலும் என் காலை மட்டும் அல்ல என் மனதையும் தொட்டு விட்டாய். அந்த இளம் வீரர் தற்போது விராட் என்ற வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.ஒரு இந்திய வீரர் என்னுடைய ரெக்கார்டை முறியடித்து இருக்கிறார் என்பதை நினைத்து என்னால் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதுவும் உலகக்கோப்பை அரை இறுதி போன்ற ஒரு பெரிய போட்டியில் இந்த ரெக்கார்டை நீங்கள் படைத்திருக்கிறீர்கள்.

அதுவும் எனது சொந்த மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தி இருப்பது தான் இதில் ஹைலைட்டே என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார். இதேபோன்று இங்கிலாந்து வீரர் நாசர் உசேன் பேசுகையில், சச்சின் உடைய சாதனைகளை எல்லாம் யாராலும் முறியடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் அதனை என் வாழ்நாளிலே நான் பார்ப்பேன் என்று கனவில் கூட பார்க்கவில்லை என்று நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, November 15, 2023, 19:04 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+