Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு கட்டத்தில் மக்களே அமைதி ஆயிட்டாங்க..கடுப்பான ரோகித்.. இங்கு ரிலாக்சாவே இருக்க முடியாது என பேச்சு

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த முறை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து இடம் தோல்வியை தழுவிய நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தக்க பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்தியா தோல்வி நோக்கி சென்றது. அப்போது ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். எனினும் முஹம்மது ஷமியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

India vs New Zealand semi final - Rohit sharma post match speech about win and pitch

இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா மும்பை வான்கடே மைதானத்தில் நான் நிறைய போட்டிகளில் விளையாடுகிறேன். இங்கு விளையாடும் போது நீங்கள் ரிலாக்ஸ் ஆகவே இருக்க முடியாது. நீங்கள் பந்து வீசும் போது உங்களுடைய பணியை விரைவில் முடித்தாக வேண்டும். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் விளையாடும் போது எப்போதுமே நம் மீது நெருக்கடி இருக்கும்.

நாங்கள் பில்டிங்கில் சில தவறுகளை செய்தாலும் ஆடுகளத்தில் பொறுமையாக தான் இருந்தோம். ஏனென்றால் ஒன்பது போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடிவிட்டோம். இதனால் இப்படி ஒரு சம்பவம் நடக்க தான் செய்யும். ஒரு ஓவருக்கு ஒன்பது ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட தான் செய்வார்கள்.

இதே போல் நியூசிலாந்தும் அடித்து ஆடினார்கள். ஆனால் நாங்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. வில்லியம்சனும் டாரல் மிச்சல் சிறப்பாக விளையாடினார்கள். எனினும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். ஏன் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய ரசிகர்களை அமைதியாகி விட்டார்கள்.

இதுதான் இந்த போட்டியோட இயற்கை. எனினும் விக்கெட்டுகள் எடுக்க நாங்கள் பல முயற்சிகளை செய்தோம். எப்போதும் போல் சமி சிறப்பாக பந்து வீசினால் எங்களுடைய டாப் 5000 பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடினார்கள். ஸ்ரேயாஸ் செயல்பாடும் மகிழ்ச்சி அளிக்கிறது. கில் தொடக்கத்தில் நன்றாக விளையாடினார். விராட் கோலி தன்னுடைய டேரல் மிட்செல் இன்னிங்ஸை வெளிப்படுத்தி மகத்தான சாதனையை தொட்டார்.

இந்த வெற்றியின் டெம்ப்ளேட்டை தான் நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நாங்கள் 230 ரன்கள் தான் அடித்தோம். ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற்றனர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது.

எங்கள் வீரர்கள் தங்களுடைய பணியை செய்தார்கள். முதல் 9 போட்டிகளில் நாங்கள் எப்படி விளையாடுகிறோமோ. அதே போல் தான் எஞ்சிய போட்டிகளிலும் விளையாட ஆசைப்படுகிறோம் என்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என ரோகித் சர்மா கூறினார்.

Story first published: Wednesday, November 15, 2023, 23:30 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+