Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் தொடரின் இந்திய அணி அறிவிப்பு -பிரித்வி ஷா அதிரடி எண்ட்ரி

Recommended Video

IND VS NZ 2020 SERIES | Sanju Samson and Prithvi Shaw replaces Shikhar Dhawan

டெல்லி : இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 போட்டிகள் நாளை மறுதினம் முதல் துவங்கவுள்ள நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளார். இதேபோல காயம் காரணமாக இந்த தொடரில் நீக்கப்பட்டுள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி, தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது.

நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம்

நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம்

2020 துவங்கியதில் இருந்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் சொந்த மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மோதி வெற்றி பெற்றுள்ள இந்தியா, தற்போது இதே வேகத்துடன் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

நாளை மறுதினம் துவக்கம்

நாளை மறுதினம் துவக்கம்

முதலில் சர்வதேச டி20 தொடரில் நியூசிலாந்துடன் இந்தியா மோதவுள்ளது. இதன் முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஹாமில்டன், வெல்லிங்டன் மற்றும் மவுண்ட் மான்கானுய் போன்ற பகுதிகளில் 5 போட்டிகள் நடைபெறவுள்ளன.

வீரர்கள் விறுவிறு சுறுசுறு

வீரர்கள் விறுவிறு சுறுசுறு

நியூசிலாந்துடனான இந்த போட்டிகளில் மோதுவதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு இந்திய அணி சென்றுள்ளது. தொடர்ந்து விறுவிறு சுறுசுறுப்பான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

நியூசிலாந்து தொடரில் நீக்கம்

நியூசிலாந்து தொடரில் நீக்கம்

நியூசிலாந்து தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது போட்டியில் தோள்பட்டையில் தவானுக்கு காயமேற்பட்டுள்ள நிலையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அணியில் இடம்பிடிப்பு

அணியில் இடம்பிடிப்பு

ஊக்கமருந்து சோதனையால் 6 மாதங்கள் தடை பெற்றிருந்த இளம் வீரர் பிரித்வி ஷா, தடையை அடுத்து விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், தற்போது நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து தொடரில் நீக்கம்

நியூசிலாந்து தொடரில் நீக்கம்

இந்நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் ஹர்திக் பாண்டியாவும் இடம்பெறவில்லை. முதுகில் அறுவை சிகிச்சை செய்துள்ள அவர், பந்துவீச்சு டெஸ்டில் தோல்வியடைந்துள்ளதால் அவர் இந்த தொடரில் இடம்பெறவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதிரடிக்கு தயாராகும் பௌலர்கள்

அதிரடிக்கு தயாராகும் பௌலர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்கள் ஏறக்குறைய ஒருமாதம் நீடிக்க உள்ளநிலையில், அதில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இன்றி காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பீரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீவ் சாய்னி, ஷர்துல் தாக்கூர் மற்றும் ஸ்பின்னர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்றவர்கள் பந்துவீச்சை மேற்கொள்ளவுள்ளனர்.

Story first published: Wednesday, January 22, 2020, 11:25 [IST]
Other articles published on Jan 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+