Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் எப்போது, யாருடன்? முழு போட்டி அட்டவணை, அணி விவரம்

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்துடன் மோதத் தயாராகிவிட்டது. உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியா விளையாடவுள்ள கடைசி சர்வதேச டி20 தொடர் இதுதான் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தியாவில் 2026 டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில், பலமான அணியைக் கட்டமைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

India vs New Zealand T20 Series India s next T20 series before T20 World Cup 2026

அடுத்த போட்டி எப்போது?

இந்திய அணியின் அடுத்த டி20 தொடர், வரும் 2026 ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெறவுள்ளது. இந்த டி20 தொடருக்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

2023-ம் ஆண்டு முதல் இதுவரை விளையாடிய கடந்த 11 டி20 தொடர்களிலும் இந்தியா தோல்வியையே சந்திக்கவில்லை. 2024 உலகக்கோப்பை வெற்றி, 2025 ஆசியக் கோப்பை சாம்பியன் என மிரட்டி வரும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான படை, நியூசிலாந்துத் தொடரையும் வென்று வெற்றியுடன் உலகக்கோப்பையைச் சந்திக்க முனைப்புடன் உள்ளது.

போட்டி அட்டவணை:

நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளும் இந்திய மைதானங்களிலேயே நடைபெறவுள்ளன.

ஜனவரி 21: முதல் டி20 - நாக்பூர்
ஜனவரி 23: 2-வது டி20 - ராய்ப்பூர்
ஜனவரி 25: 3-வது டி20 - கவுகாத்தி
ஜனவரி 28: 4-வது டி20 - விசாகப்பட்டினம்
ஜனவரி 31: 5-வது டி20 - திருவனந்தபுரம்

இந்திய அணி அறிவிப்பு:

நியூசிலாந்து தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய டி20 அணி விபரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

Story first published: Monday, December 22, 2025, 15:17 [IST]
Other articles published on Dec 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+