Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இசான் கிஷன் காயம்.. மாற்று வீரரை சேர்க்காத இந்திய அணி.. டாசில் சூர்யகுமார் தவறு

விசாகப்பட்டினம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் நியூஸிலாந்து அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா ஏற்கனவே வென்ற நிலையில், தற்போது நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார்,விசாகப்பட்டினத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். நேற்று இரவு பயிற்சி செய்த போது கூட இங்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. எனவே நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். எங்கள் அணியில் இருக்கும் நல்ல பழக்கங்களை மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும். தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும்.

இந்த போட்டியை பார்க்க வந்திருக்கும் ரசிகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்கை கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய செய்தியாக இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் இசான் கிஷனுக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங் அணியில் இருக்கிறார் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய நியூஸிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாட்ணர் இப்போதே பனிப்பொழிவு அதிகமாக இருக்கின்றது. எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும். ஆடுகளமும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. இதை பயன்படுத்திக் கொண்டு பெரிய ரன்கள் சேர்க்க வேண்டும்.

எங்கள் அணியில் பெகுர்சன்,பிரஸ்வெல் ஆகியோர் இன்னும் தயாராகவில்லை. பின் ஆலன் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. எனவே இந்த மூன்று வீரர்களும் தற்போது இல்லை. கேயில் ஜெமிஷனுக்கு பதிலாக ஜாக் போல்க்ஸ் விளையாடுகிறார். இதேபோன்று ஜெமி நீசமும் முழு உடல் தகுதியைப் பெறவில்லை. என்று மிட்செல் சாட்ணர் கூறினார்.

இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அக்சர் பட்டேல் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மாற்றம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடரை ஏற்கனவே இந்தியா வென்ற நிலையில், பனிப்பொழிவில் பந்துவீசி, இலக்கை தற்காத்து கொள்ள இந்திய அணி பயிற்சி எடுத்திருக்க வேண்டும். இதற்காக முதலில் இந்திய அணி பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த விசயத்தில் சூர்யகுமார் யாதவ் தவறு செய்துவிட்டார்.

Story first published: Wednesday, January 28, 2026, 18:46 [IST]
Other articles published on Jan 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+