For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ : இறுதி போட்டி எந்த சேனல், ஓடிடியில் காணலாம்? நேரம், பிட்ச் ரிப்போர்ட், ரிசர்வ் டே விவரம்

அகமதாபாத்: ஐசிசி டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று ஞாயிற்றுகிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது T20 உலகக் கோப்பையை வெல்ல குறிவைக்க, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி தங்கள் முதல் கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது.

மும்பையில் நடைபெற்ற பரபரப்பான அரையிறுதியில் இங்கிலாந்தை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சனின் சிறப்பான 89 ரன்கள் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

{image-IND vs NZ-07-2026-000375b-jpg-1772904735019_1772904736337-600x338.jpg tamil.mykhel.com}

நியூசிலாந்து அணி, கொல்கத்தாவில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான அணி தென்னாப்பிரிக்காவை 169/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதில், மேட் ஹென்றி (2/34), கோல் மெக்கோன்ச்சி (2/9), மற்றும் ரச்சின் ரவீந்திரா (2/29) ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

IND vs NZ:வருண் சக்கரவர்த்தி உலகின் நம்பர் 1 வீரர்.. நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார்-சூர்யகுமார்IND vs NZ:வருண் சக்கரவர்த்தி உலகின் நம்பர் 1 வீரர்.. நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார்-சூர்யகுமார்

தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்த ஃபின் ஆலன், வெறும் 33 பந்துகளில் 100 ரன்கள் குவித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்துக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, இறுதிப் போட்டிக்கு வழிவகுத்தார்.

இந்தியா, நியூசிலாந்து இறுதிப் போட்டி மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு இந்திய நேரப்படி ஆட்டம் தொடங்கும். டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும். இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் நேரலையில் காணலாம். ஒரு வேலை ஆட்டம் மழையால் தடைப்பட்டால், ரிசர்வ் நாளான திங்கட்கிழமை போட்டி விட்ட இடத்தில் இருந்து நடைபெறும். அகமதாபாத் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது.

IND vs NZ: இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைத்து அமைதியாக்குவோம்.. நியூசி. கேப்டன் சாண்ட்னர்IND vs NZ: இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைத்து அமைதியாக்குவோம்.. நியூசி. கேப்டன் சாண்ட்னர்

அணிகளின் விவரம்:

இந்தியா: சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

நியூசிலாந்து: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், இஷ் சோதி, கைல் ஜாமிசன், கோல் மெக்கோன்ச்சி.

Story first published: Sunday, March 8, 2026, 6:00 [IST]
Other articles published on Mar 8, 2026
English summary
Preview of the India vs New Zealand T20 World Cup 2026 final in Ahmedabad, highlighting team form, key performances in the tournament, and streaming details for live coverage.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+