Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: பைனலில் இந்திய அணி பிளேயிங் லெவனில் 3 சந்தேகம்.. அறிவுரை வழங்கிய ஆகாஷ் சோப்ரா

மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் இடம் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகம், எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா,பரிந்துரைத்துள்ளார். அபிஷேக் சர்மா தொடர்ந்து தொடக்க வீரராகவும், வருண் சக்கரவர்த்தி அணியிலும் நீடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட பெரிய தோல்விக்குப் பின்னர் இந்தியா வெற்றிகரமான பாதையில் பயணித்தாலும், இறுதிப் போட்டிக்காக இரண்டு முக்கியமான வீரர்களைப் பற்றி அணி நிர்வாகம் சிந்தித்து வருகிறது. இந்திய அணியின் முக்கிய ஆயுதங்களாகக் கருதப்படும் அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் தற்போது தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் திணறி வருகின்றனர்.

அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, கடந்த இரண்டு ஆட்டங்களில் அதிக ரன்களை வாரிக் கொடுத்து, சறுக்கலை சந்தித்து வருகிறார். அதேபோல், தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, இந்தத் தொடரில் ஆடிய ஏழு இன்னிங்ஸ்களில் மிகவும் மோசமான 12.71 சராசரியை மட்டுமே வைத்துள்ளார். மறுபுறம், குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்தச் சூழலில், வருணுக்குப் பதிலாக குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டுமா அல்லது அபிஷேக்கிற்குப் பதிலாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரைத் தொடக்கத்தில் களமிறக்கி ரிங்கு சிங்கைச் சேர்த்து அணியின் பேட்டிங் பலத்தை உறுதி செய்ய வேண்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த முக்கியமான கேள்விகள் அனைத்திற்கும் ஆகாஷ் சோப்ரா ஒரு வித்தியாசமான கோணத்தில் பதிலளித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள கோப்பைக்கான இந்த மோதலில், எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சோப்ரா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக X (தளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், "அபிஷேக் சர்மாவை தொடக்க வீரராக இந்தியா தேர்வு செய்யுமா? வருண் சக்கரவர்த்தி ஆடுவாரா? குல்தீப் யாதவ்வுடன் செல்வார்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வருண் மற்றும் அபிஷேக் குறிப்பிடத்தக்க செயல்பாடு இல்லாதபோதும், நீங்கள் இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டீர்கள். எனவே, என் பார்வையில், இறுதிப் போட்டியில் அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்ப மாட்டீர்கள்," என்று தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அபிஷேக் சர்மா இன்னும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாகவே இருக்கிறார் என்பதையும் சோப்ரா நினைவுபடுத்தினார்.

"உங்கள் எட்டு பேட்ஸ்மேன்களில், அனைவரும் சிறப்பாகச் செயல்பட மாட்டார்கள். மிகவும் நேர்மையாகச் சொல்லப்போனால், நான் வருண் பக்கம்தான் நிற்பேன். குல்தீப்பை உள்ளே கொண்டு வர இருக்கலாம், ஆனால் நான் வருண் சக்கரவர்த்தியைத் தேர்ந்தெடுப்பேன். ஒரு நாள் எல்லாம் மாறும் என்று நான் நம்புகிறேன், எனவே நான் அதே பதினொரு பேருடன் தொடர்வேன். பேட்டிங் வரிசையை மட்டும் நான் எப்போதாவது மாற்றலாம், ஆனால் அதைத் தவிர எதையும் மாற்றப் போவதில்லை," என்று சோப்ரா அழுத்தமாகக் கூறினார்.

ஆகாஷ் சோப்ராவின் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

Story first published: Saturday, March 7, 2026, 16:29 [IST]
Other articles published on Mar 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+