Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா -நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்

வெல்லிங்டன்: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து பந்துவீச்சாளர் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தண்டுவட பிரச்சினையால் அணியில் இடம்பெறாமல் உள்ள ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தேர்வில் தன்னுடைய பிட்னசை நிரூபிக்க தவறிவிட்டார். இதையடுத்து அவர் நியூசிலாந்திற்கு எதிரான தொடர்களில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தன்னுடைய பிட்னசை நிரூபிக்கும்வகையில் அவர் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு தண்டுவட நிபுணரிடம் பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்படவுள்ள நிலையில் அவருடன் என்சிஏ தலைமை பிசியோ உடன் செல்லவுள்ளார்.

21ம் தேதி துவக்கம்

21ம் தேதி துவக்கம்

நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு தற்போது சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதையடுத்து சர்வதேச ஒருநாள் தொடரிலும் டெஸ்ட் தொடரிலும் இரு அணிகளும் மோதவுள்ளன. இன்றுடன் சர்வதேச டி20 போட்டி தொடர் நிறைவுறவுள்ள நிலையில், இந்த தொடரை இந்தியா கைகொண்டுள்ளது. இந்நிலையில் வரும் 21ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது.

அணியில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா

அணியில் இடம்பெறாத ஹர்திக் பாண்டியா

தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பெறவில்லை. கடந்த மாதத்தில் என்சிஏ மேற்கொண்ட பிட்னஸ் தேர்வில் ஹர்திக் பாண்டியா தோல்வியுற்றார். இதையடுத்து நியூசிலாந்திற்கு எதிரான தொடர்களிலும் அவர் இடம்பெறவில்லை. அவர் தனது பிட்னசை நிரூபிக்கும்வரையில் எந்த போட்டிகளிலும் இடம்பெற மாட்டார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் தெரிவித்திருந்தார்.

டெஸ்ட் தொடரில் நீக்கம்

டெஸ்ட் தொடரில் நீக்கம்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தேர்வில் ஹர்திக் பாண்டியா தோல்வியுற்றுள்ள நிலையில், அவர் தற்போது லண்டனில் தண்டுவட நிபுணர் ஜேம்ஸ் அலிபோனிடம் பிட்னஸ் டெஸ்ட் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் என்சிஏ தலைமை பிசியோ ஆஷிஷ் கவுசிக்கும் உடன் செல்லவுள்ளதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் புள்ளிகள்

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் புள்ளிகள்

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணி மோதவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 21ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இந்த போட்டிகளில் இந்தியா பெறும் புள்ளிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்க்கப்படும். கடந்த சில மாதங்களாக பல அணிகளுக்கு எதிராக போட்டியிட்டு 7 தொடர்களை வெற்றி கொண்டுள்ள இந்தியா, இதில் 360 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 2, 2020, 13:18 [IST]
Other articles published on Feb 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+