Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, போட்டி அட்டவணை, எந்த சேனல், போட்டி தேதி, நேரம்.. முழு விவரம்

பெங்களூரு: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 16 முதல் துவங்க உள்ளது. இந்தியா அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மோதியது.

அந்த இரண்டு தொடரிலும், ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்று இருக்கிறது. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகள் நடக்கும் இடம், நேரம், நேரலையில் எப்படி பார்க்கலாம்?, இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணியில் பங்கேற்கப் போகும் வீரர்கள் குறித்த தகவல்கள் இங்கே அளிக்கப்பட்டு இருக்கிறது.

ind vs nz india new zealand

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி விபரம் -

இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்.

நியூசிலாந்து அணி : டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளன்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட் மட்டும்), டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன், வில் யங்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது. அக்டோபர் 16 அன்று இந்த போட்டி துவங்க உள்ளது. அக்டோபர் 16 முதல் 20 வரை இந்தப் போட்டி நடைபெறும்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி அக்டோபர் 24 முதல் 28 வரை நடைபெறும்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1 முதல் 5 வரை நடைபெறும். இந்த மூன்று போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்கும்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்போர்ட்ஸ் 18 என்ற தொலைக்காட்சி சேனலில் பார்க்கலாம். மொபைல் அல்லது இணைய தளத்தில் இந்த டெஸ்ட் தொடரை பார்க்க விரும்புபவர்கள் ஜியோ சினிமா ஆப் அல்லது இணையதளத்தில் பார்க்கலாம். ஜியோ சினிமாவில் ஒன்பது மொழிகளில் வர்ணனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வர்ணனை செய்யப்படும்.

Story first published: Monday, October 14, 2024, 18:32 [IST]
Other articles published on Oct 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+