Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் இடத்திற்கு அடித்துக்கொள்ளும் 2 இளம் வீரர்கள்.. முடிவை அறிவித்த புஜாரா.. சோகத்தில் சீனியர்!

சென்னை: நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என புஜாரா அப்டேட் கொடுத்துள்ளார்.

Recommended Video

Shubman Gill கண்டிப்பா இருப்பாரு.. New Zealand தொடருக்கு Pujara கொடுத்த Update

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 25ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11- ஐ தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

விராட் கோலிக்கு முதல் டெஸ்டில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ரகானே தலைமை தாங்குகிறார். அதன்படி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல் ஓப்பனிங் களமிறங்குகிறார். அவருடன் மயங்க் அகர்வால் ஜோடி சேர்வார் எனத்தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு புஜாரா களமிறங்க, தற்போது விராட் கோலியின் இடத்தை பூர்த்தி செய்ய தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

2 வீரர்களிடையே போட்டி

2 வீரர்களிடையே போட்டி

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே போல இந்தியாவுக்காக இதற்கு முன்னர் அசத்தியுள்ள சுப்மன் கில்லையும் 4வது வீரராக களமிறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரில் யார் ப்ளேயிங் 11ல் இருப்பார்கள் என்ற கேள்வி தான் இன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

புஜாரா கருத்து

புஜாரா கருத்து

இந்நிலையில் சுப்மன் கில் தான் இடம்பெறுவார் என துணைக்கேப்டன் புஜாரா வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சுப்மன் கில் ஒரு சிறந்த வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.துரதிர்ஷ்ட வசமாக இங்கிலாந்து தொடரை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயம் சுப்மன் கில் விளையாடுவார். ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது.

டிராவிட் இருக்கிறார்

டிராவிட் இருக்கிறார்

சுப்மன் கில்லின் ஃபார்மை பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வாறு விளையாடினாரோ அதேபோன்று இந்த தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்துவார். ராகுல் டிராவிட் அணியில் இருப்பதால், அவரிடம் இருந்து சுப்மன் கில்லுக்கு நல்ல அறிவுரைகள் கிடைக்கும் என புஜாரா கூறியுள்ளார். முதலில் இந்த இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் தான் களமிறக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் ஏமாற்றத்தில் இருப்பதாக தெரிகிறது.

Story first published: Tuesday, November 23, 2021, 20:22 [IST]
Other articles published on Nov 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+