Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 புதிய வீரர்கள் அறிமுகம்.. சோகத்தில் நட்சத்திர வீரர்.. 2வது டி20 போட்டிக்காக இந்தியா ப்ளேயிங்11 இதோ

ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் 2 இளம் வீரர்கள் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Abu Dhabi T10 League 2021: 5 Indians will play in this Event | OneIndia Tamil

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு ராஞ்சியில் நடைபெறவிருக்கிறது.

முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டியிலும் வெற்றி பெற முணைப்பு காட்டி வருகிறது.

 வாழ்வா சாவா போட்டி

வாழ்வா சாவா போட்டி

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும். இதே போல இன்று வாழ்வா சாவா போட்டியாக இருப்பதால் நியூசிலாந்தும் கடும் சவால் கொடுத்து வருகிறது. எனவே அதனை சமாளிக்க 2 புதிய வீரர்களை களமிறக்க ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார்.

2 அதிரடி மாற்றம்

2 அதிரடி மாற்றம்

கடந்த போட்டியில் பேட்டிங் வரிசை சிறப்பாக அமைந்தது. வெங்கடேஷ் ஐயர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஸ்ரேஷ் ஐயர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்திருந்தார். மேலும் சூர்யகுமார் யாதவின் அதிரடி என டாப் ஆர்டர் பேட்டிங் மிக பலமாக இருந்தது. எனவே பேட்டிங்கில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

பந்துவீச்சில் தான் 2 வீரர்கள் அதிரடியாக நீக்கப்படவுள்ளனர். அதாவது முதல் டி20 போட்டியில் முகமது சிராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. எனவே அவருக்கு பதிலாக இன்று ஹர்ஷல் படேல் களமிறங்குவார் எனத்தெரிகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிகாக விளையாடிய ஹர்ஷல் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

தீபக் சஹார் இல்லை

தீபக் சஹார் இல்லை

இதே போல தீபக் சஹாருக்கு பதிலாக ஆவேஷ் கான் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் டி20 போட்டியில் தீபக் சஹாரின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. 4 ஓவர்களில் அவர் 42 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே அவர் எடுத்தார். எனவே அவரை 2வது போட்டியில் உட்கார வைக்க டிராவிட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Friday, November 19, 2021, 18:12 [IST]
Other articles published on Nov 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+