Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசி.க்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ..!!

மும்பை;இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நாளை தொடங்குகிறது.

Recommended Video

IND vs NZ 2nd Test: Predictable Playing 11 | OneIndia Tamil

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்ததால் , இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புகிறார். இதனால் யார் அணியில் இருப்பார்கள் , வெளியேறுவார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.

டிராவிட் முடிவு

டிராவிட் முடிவு

முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு , அவருக்கு பதிலாக தான் விராட் கோலி தொடருவார் என்றும், தொடர்ந்து சொதப்பி வந்த ரஹானே அணியில் நீடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயிற்சியாளர் டிராவிட் தொடக்க வீரர் மாயங் அகர்வாலை நீக்கிவிட்டு ரஹானேவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளேயிங் xi

பிளேயிங் xi

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியாவின் உத்தேச பேட்டிங் வரிசை 1,சுப்மான் கில் 2, விரித்மான் சாஹா 3, புஜாரா, 4, விராட் கோலி, 5, ரஹானே, 6,ஸ்ரேயா ஐயர், 7, ஜடேஜா, 8,அஸ்வின். 9, அக்சர் பட்டேல்,/ சிராஜ் 10, இஷாந்த் சர்மா, 11, உமேஷ் யாதவ்

சாஹா

சாஹா

இதில் புஜாரா தொடக்க வீரராக களமிறங்கி, சாஹா எப்போதும் போல் கீழ் வரிசையில் இறங்கவும் வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் 2 சுழற்பந்துவீ ச்சாளர்களை மட்டும் களமிறக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆட்டத்தில் சாஹா அரைசதம் விளாசியதால், அவருக்கே இந்தப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஆடுகளம்

ஆடுகளம்

தற்போது வரை ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக காணப்படுகிறது. நாளை புற்கள் முழுமையாக வெட்டப்படவும் வாய்ப்புள்ளது. மும்பையில் மழை பொழிவு இருப்பதால், ஆடுகளத்திலும், காற்றிலும் ஈரப்பதம் நிறைந்து இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். 2016ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பையில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், மும்பை மக்கள் ஆர்வத்துடன் போட்டியை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

Story first published: Thursday, December 2, 2021, 12:01 [IST]
Other articles published on Dec 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+