For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

India vs NZ 3rd T20 : கடைசி ஓவர் வரை போராடித் தோற்ற இந்தியா.. எல்லாத்துக்கும் இது தான் காரணம்!

ஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன 3வது டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதல் இரண்டு போட்டிகள் முடிவில் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால், தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமைந்தது. அதில் இந்தியா தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்திய அணி மாற்றம்

இந்திய அணி மாற்றம்

இந்த போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக சாஹல்-க்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் இணைந்தார். முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய மற்ற வீரர்கள் அப்படியே தொடர்ந்தனர்.

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணி விவரம்

நியூசிலாந்து அணியில் பெர்குசன் நீக்கப்பட்டு, பிளேர் டிக்னர் டி20 போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். நியூசிலாந்து அணி - டிம் செய்ஃபர்ட், கோலின் மன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), மிட்செல், ராஸ் டெய்லர், கோலின் டி கிராண்ட்ஹோம், சான்ட்னர். குக்லேய்ஜன், டிம் சௌதி, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடினர். செய்ஃபர்ட் 43, கோலின் மன்றோ 72, வில்லியம்சன் 27, கிராண்ட்ஹோம் 30, மிட்செல் 19, டெய்லர் 14 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.

இந்தியா பந்து வீச்சு எப்படி?

இந்தியா பந்து வீச்சு எப்படி?

சிறிய மைதானமான ஹாமில்டனில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் மட்டுமே கட்டுகோப்பாக வீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். மற்ற நால்வரும் ரன்களை வாரி இறைத்தனர். க்ருனால் பண்டியா 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா 212 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது. துவக்க வீரர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான், தோனி தவிர்த்து ஆடிய அத்தனை பேட்ஸ்மேன்களும் குறை சொல்ல முடியாத அளவு ஆடினர். ரோஹித் 38, விஜய் ஷங்கர் 43, ரிஷப் பண்ட் 28, ஹர்திக் பண்டியா 21, கார்த்திக் 33, க்ருனால் 26 ரன்கள் எடுத்தனர். இந்தியா கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க முடியாமல் திணறினார். அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

தொடரில் தோல்வி

தொடரில் தோல்வி

இந்தியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா முழு பலத்துடன் இந்த தொடரில் களம் இறங்கவில்லை. பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து உலகக்கோப்பைக்கு அவர்களை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் அது அணியின் வெற்றியை பாதித்தது.

Story first published: Sunday, February 10, 2019, 16:47 [IST]
Other articles published on Feb 10, 2019
English summary
India vs Newzealand : 3rd T20 Live score update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+