Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு ஓயிட்வாஷ் அடிக்க ரோகித் படை ரெடி.. இந்தியாவின் புதிய பிளான் என்ன?

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஏற்கனவே வென்ற நிலையில்,, இந்தப் போட்டி சமிபிரதாய ஆட்டமாக தான் இருக்கும், பனிப்பொழிவு இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் டாஸ் முக்கியத்துவம் வகிக்கும்.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்கள் 15 நிடத்திலேயே விற்று தீர்ந்தன. ஆறுதல் வெற்றிக்காக நியூசிலாந்து போராடும் நிலையில் இந்திய அணி புதிய பிளான் ஒன்றை தயாரித்துள்ளது.

ஓயிட்வாஷ்

ஓயிட்வாஷ்

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா தொடரை விட்டு வெளியேறியது. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா வென்றாலும், 3-0 என ஓயுட்வாஷ் செய்து காயப்பட்ட ரசிகர்களுக்கு மருந்து அளிக்க ரோகித் படை தயாராக உள்ளது. அதே சமயத் ஆறுதல் வெற்றிக்காக நியூசிலாந்து போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் கலைக்கட்டும்.

வாயப்பு

வாயப்பு

இந்திய அணி தொடரை வென்றதால், பயிற்சியாளர் டிராவிட் புதிய பிளான் ஒன்றை வகுத்துள்ளார்.அதாவது, இன்றைய ஆட்டத்தில் நடப்பு தொடரில் களமிறங்காத இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு தரலாம் என்பது தான் அந்த பிளான். சூர்யகுமார் யாதவ்க்கு பதில் ருத்துராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட்க்கு பதில் இஷான் கிஷன், அஸ்வின் அல்லது அக்சருக்கு பதில் சாஹல் மற்றும் புவனேஸ்வர்குமாருக்கு பதில் ஆவேஷ் கான் ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

டிராவிட் ஸ்டைல்

டிராவிட் ஸ்டைல்

கோலி, ரவி சாஸ்த்ரி கூட்டணியின் போது அணியில் இருக்கும் இளம் வீரர்களை பெஞ்சில் அமர வைப்பதையே வழக்கமாக கொண்டனர். ஆனால் டிராவிட் வாய்ப்பு தருவதில் வள்ளல். கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இலங்கை தொடரில் இந்திய அணி தொடரை வென்றதும், கடைசி போட்டியில் 5 புதிய வீரர்களுக்கு டிராவிட் வாய்ப்பு அளித்தார். இதனால் இது டிராவிட் ஸ்டைல் என்பதால் இன்றைய இந்திய அணியில் மாற்றம் நிகழும்.

இந்திய அணி

இந்திய அணி

உத்தேசமாக 1, ரோகித் சர்மா 2, கே.எல்.ராகுல், 3. ருத்துராஜ்/ சூர்யகுமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர். 5, இஷான் கிஷன்/ரிஷப் பண்ட், 6.வெங்கடேஷ் ஐயர். 7.அக்சர் பட்டேல், 8. அஸ்வின்/சாஹல் 9, ஆவேஷ் கான் / புவனேஸ்வர் குமார். 10. ஹர்சல் பட்டேல். 11, தீபக் சாஹர்

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. நடுவரிசை வீரர்களும், பந்துவீச்சாளர்களும் கைக் கொடுத்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி தர முடியும். (உத்தேசமாக)1. குப்தில், 2, டேரல் மிட்செல் 3, மார்க் சாப்மேன், 4, பிலிப்ஸ், 5,செஃபர்ட், 6,ஜேம்ஸ் நீஷம், 7, மிட்செல் சாண்டர்,8, டிம் சௌதி, 9,போல்ட், 10,பெகுர்சன், 11 சோதி

Story first published: Sunday, November 21, 2021, 10:49 [IST]
Other articles published on Nov 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+