இந்தியா Vs நியூசி 3வது டி20 - காயம் காரணமாக கேப்டன் மாற்றம்.. பிளேயிங் லெவன், வானிலை நிலவரம் என்ன?
நேப்பியர் : இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செவ்வாய்கிழமை இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
முதல் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது கடைசி ஆட்டத்தில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றிவிடும்.
இதனால் 3வது டி20 போட்டியை வென்று தொடரை சமன் செய்ய நியூசிலாந்து அணி தீவிர முயற்சி மேற்கொள்ளும்.

வானிலை
இதுவரை நேப்பியர் மைதானத்தில் இந்திய அணி 7 ஒருநாள் போட்டியில் விளையாடி 3 ஆட்டங்களில் வென்று இருக்கிறது. 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதுவரை அங்கு விளையாடிய 2 டெஸ்டிலும் இந்தியா சமன் செய்துள்ளது. நாளை தான் அங்கு இந்தியா முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. நெப்பியரில் நாளை மாலைக்கு பிறகு 3 மணி நேரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் இல்லை
இந்த நிலையில், இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக உள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் வில்லியம்சன், நாளைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை. மருத்துவரை சந்திக்க செல்வதால், நாளைய அட்டத்தில் அவர் விளையாவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிம் சௌதி புதிய கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்திய அணி
நியூசிலாந்து அணி நாளைய ஆட்டத்தில் கூடுதலாக மார்க் சாப்மேன் என்ற சுழற்பந்துவீச்சாளர் களமிறங்க உள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை நாளை புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது. இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, நாளை ஒரு ஆட்டம் மட்டும் தான் தொடரில் இருப்பதால், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது கடினம் என்று கூறி இருந்தார்.

பிளேயிங் லெவன்
1, ரிஷப் பண்ட், 2, இஷான் கிஷன், 3, சூர்யகுமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, ஹர்திக் பாண்டியா, 6, தீபக் ஹூடா, 7, வாசிங்டன் சுந்தர், 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, முகமது சிராஜ், 11, சாஹல்


Click it and Unblock the Notifications