Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களில் சாஹல் தான் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விஷயம் ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சாஹல் அதிக ரன்கள்

சாஹல் அதிக ரன்கள்

நான்காவது போட்டியில் இந்திய அணியில் சாஹல் 18 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்தது பண்டியா. அவர் 16 ரன்கள் அடித்தார். குல்தீப் 15, தவான் 13 ரன்கள் அடித்தனர். இவர்கள் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இரண்டாவது அதிகபட்சம்

இரண்டாவது அதிகபட்சம்

சாஹல்-இன் 18 ரன்கள் இந்திய அணியில் பத்தாவது பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும். முதல் இடத்தில் ஜவகல் ஸ்ரீநாத் இருக்கிறார். இந்த போட்டியில் இந்திய அணியில் அதிக பந்துகள் சந்திதவரும் சாஹல் தான். சாஹல் 37 பந்துகள் சந்தித்து இருந்தார்.

கரை சேர்க்க முயற்சி

கரை சேர்க்க முயற்சி

இந்திய அணியில் 55 ரன்களுக்கு 8 விக்கெட்கள் விழுந்த நிலையில், கடைசி நேரத்தில் சாஹல், குல்தீப் கூட்டணி அமைத்து இந்திய அணியை ஓரளவு கரை சேர்க்க முயன்றனர். எனினும், இந்தியா 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தன் ஏழாவது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

இணையத்தில் பேச்சு

இணையத்தில் சாஹல்-இன் இந்த பேட்டிங் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஒருவர் சாஹல் ரஞ்சி தொடரில் 77 பந்துகள் ஒரு ரன் கூட எடுக்காமல் பேட்டிங் செய்து டக் அவுட் ஆனவர் தான் சாஹல் என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு பெட்?

இந்த போட்டியில் சாஹல் தான் அதிக ரன் எடுப்பார், அதிக பந்துகளை சந்திப்பார் என எத்தனை பேர் பெட் கட்டினீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார் ஹர்ஷா போக்ளே.

Story first published: Thursday, January 31, 2019, 16:11 [IST]
Other articles published on Jan 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+