Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 92 ரன்கள்.. பேட்ஸ்மேன்கள் சொதப்பல்.. மோசமான சாதனைகளை அடுக்கிய இந்திய அணி!

Recommended Video

மோசமான சாதனைகளை அடுக்கிய இந்திய அணி- வீடியோ

ஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வி அடைந்தது.

ரோஹித் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோரை அடித்து பரிதாப சாதனை செய்தது இந்தியா. மேலும், சில மோசமான பதிவுகளை இந்திய அணி செய்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.

இந்தியா ஏமாற்றம்

இந்தியா ஏமாற்றம்

கடந்த காலங்களில் ரோஹித் தலைமையில் இந்தியா தொடர் வெற்றிகளை கண்டதால், இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதற்கு மாறாக இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டாக சரிந்தனர்.

ஆறு பேட்ஸ்மேன்கள் 30 ரன்கள்

ஆறு பேட்ஸ்மேன்கள் 30 ரன்கள்

35 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. முதல் ஆறு இந்திய பேட்ஸ்மேன்கள் சேர்ந்து 30 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் ரோஹித் 7, தவான் 13, கில் 9, ராயுடு 0, தினேஷ் கார்த்திக் 0, கேதார் ஜாதவ் 1 என முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

மிகக் குறைந்த ரன்கள்

மிகக் குறைந்த ரன்கள்

இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் எடுத்த மிகக் குறைந்த ரன்கள் பட்டியலில் இந்த போட்டி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் முதல் ஆறு இந்திய பேட்ஸ்மேன்கள் 1982இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் 39 ரன்கள் எடுத்து இருந்ததே குறைந்த ரன்களாக இருந்தது.

மிகக் குறைந்த ஸ்கோர்

மிகக் குறைந்த ஸ்கோர்

மேலும், இந்த போட்டியில் இந்தியா எடுத்த 92 ரன்கள் தான் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஏழாவது மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது குறைந்த ஸ்கோர் மற்றும் நியூசிலாந்து மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோர் என இந்தியா சில மோசமான சாதனைகளை செய்துள்ளது.

மூத்த வீரர்கள் இல்லை

மூத்த வீரர்கள் இல்லை

தோனி, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி ரோஹித் தலைமையில் சறுக்கி உள்ளது. சிலர் இந்த மோசமான பேட்டிங்கிற்கு காரணம் ஹாமில்டன் ஆடுகளம் என கூறியுள்ளனர். எனினும், நியூசிலாந்து அணி 15வது ஓவருக்குள் வெற்றியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 31, 2019, 13:09 [IST]
Other articles published on Jan 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+