Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs NZ 4th ODI : இந்தியாவை வச்சு செஞ்ச நியூசி.. படுதோல்வி அடைந்த ரோஹித் அணி!

Recommended Video

Ind vs NZ 4th ODI: கோலி, தோனி இல்லாத இந்திய அணி, பேட்டிங்கில் தடுமாற்றம்!

ஹாமில்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

ஏற்கனவே, 3-0 என நியூசிலாந்து தொடரை இழந்த நிலையில், இந்த போட்டியில் வென்று ஆறுதல் தேடிக் கொண்டுள்ளது நியூசிலாந்து.

கோலிக்கு பதில் கில்

கோலிக்கு பதில் கில்

கோலி கடைசி இரு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ரோஹித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். கோலிக்கு பதிலாக 19 வயது இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.

தோனி இல்லை

தோனி இல்லை

இந்த போட்டியில் இந்திய அணியில் தோனி களம் இறங்கவில்லை. மூன்றாவது போட்டியில் காயம் காரணமாக களம் இறங்காத தோனி, இந்த போட்டியில் இன்னும் முழுமையாக காயத்தில் இருந்து குணமாகாததால் களம் இறங்கவில்லை என கேப்டன் ரோஹித் தெரிவித்தார்.

கலீல் அஹ்மது இடம் பெற்றார்

கலீல் அஹ்மது இடம் பெற்றார்

மற்றொரு மாற்றமாக வேகப் பந்துவீச்சாளர் ஷமிக்கு பதில் கலீல் அஹ்மது களம் இறங்குகிறார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் களமிறங்கிய கலீல், அதிக ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில், இந்த போட்டியில் பரிசோதனை முயற்சியாக களமிறங்கும் அவர், அவர் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), தவான், ஷுப்மன் கில், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், கலீல் அஹ்மது.

இந்தியா முதலில் பேட்டிங்

இந்தியா முதலில் பேட்டிங்

நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் முதல் எட்டு பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டை இழந்தனர். கடைசியில் குல்தீப் 15, சாஹல் 18 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ரன்களை ஓரளவு உயர்த்தினர். இந்தியா 30.5 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் பவுல்ட் அதிரடியாக 5 விக்கெட்கள் வீழ்த்தினார். கிராண்ட்ஹோம் 3, ஆஸ்ட்லே 1, நீஷம் 1 விக்கெட் வீழ்த்தினர்.

நியூசிலாந்துக்கு எளிய இலக்கு

நியூசிலாந்துக்கு எளிய இலக்கு

நியூசிலாந்து அணி 93 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பேட்டிங் ஆடியது. அந்த அணியின் குப்டில் 14, கேன் வில்லியம்சன் 11 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

Story first published: Thursday, January 31, 2019, 13:37 [IST]
Other articles published on Jan 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+