Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வசமா சிக்கிய இந்திய வீரர்கள்.. சாதனைகளை குவித்த நியூசி. வீரர் ட்ரென்ட் பவுல்ட்

ஹாமில்டன் : இந்திய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் அசத்தலாக பந்து வீசினார்.

இந்த போட்டியில் ஐந்து விக்கெட்களை அள்ளிய ட்ரென்ட் பவுல்ட் இரண்டு முக்கிய சாதனைகளை இந்த போட்டியில் எட்டினார். யாருடைய விக்கெட்களை வீழ்த்தினார், என்ன சாதனைகள் செய்தார் என பார்க்கலாம்.

தொடர்ந்து பத்து ஓவர்கள்

தொடர்ந்து பத்து ஓவர்கள்

முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்த நியூசிலாந்து அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் பெற்றுள்ளது. இந்த போட்டியில் ட்ரென்ட் பவுல்ட் தொடர்ந்து பத்து ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

நான்கு மெய்டன் ஓவர்கள்

நான்கு மெய்டன் ஓவர்கள்

பவுல்ட் வீசிய பத்து ஓவர்களில் நான்கு மெய்டன் ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் தவான் விக்கெட்டை வீழ்த்தி தன் விக்கெட் வேட்டையை தொடங்கினார் பவுல்ட். அடுத்து தொடர்ந்து ரோஹித், ஷுப்மன் கில், ஜாதவ், பண்டியா என விக்கெட்களை அள்ளினார்.

அதிக ஐந்து விக்கெட்கள்

அதிக ஐந்து விக்கெட்கள்

இந்த போட்டியில் எடுத்த ஐந்து விக்கெட்களுடன் சேர்த்து பவுல்ட் இதுவரை ஐந்து முறை ஒருநாள் போட்டிகளில் ஐந்து விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் எடுத்துள்ளார். இதன் மூலம், நியூசிலாந்து வீரர்களில் அதிக முறை 5+ விக்கெட்கள் எடுத்த ரிச்சர்ட் ஹாட்லீ சாதனையை சமன் செய்துள்ளார் பவுல்ட்.

ஒரே நாட்டில் விரைவாக 100

ஒரே நாட்டில் விரைவாக 100

மேலும், ஒரே நாட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை எட்டியவர் என்ற சாதனையையும் பவுல்ட் செய்துள்ளார். நியூசிலாந்து மண்ணில் 49 ஒருநாள் போட்டிகளில் ட்ரென்ட் பவுல்ட் 100 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

100 விக்கெட்கள் எடுத்தோர்

100 விக்கெட்கள் எடுத்தோர்

இந்த பட்டியலில் ட்ரென்ட் பவுல்ட்-க்கு அடுத்து வக்கார் யூனிஸ் (53 போட்டிகள், நாடு - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), மெக்கிராத் / ப்ரெட் லீ (56 போட்டிகள், நாடு - ஆஸ்திரேலியா), ஷான் பொல்லாக் (60 போட்டிகள், நாடு - தென்னாப்பிரிக்கா) ஆகியோர் இருக்கின்றனர்.

Story first published: Thursday, January 31, 2019, 17:56 [IST]
Other articles published on Jan 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+