For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs NZ 5th ODI : கொடுத்த பில்ட்-அப் எல்லாம் வீணாப் போச்சே.. தோனி ரசிகர்கள் ஏமாற்றம்!

Recommended Video

சொதப்பிய இந்திய பேட்டிங்... ஏமாற்றிய தோனி

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா பேட்டிங்கில் தடுமாறி உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது, தோனி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.

நான்காவது போட்டி தடுமாற்றம்

நான்காவது போட்டி தடுமாற்றம்

நான்காவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா பேட்டிங்கில் தடுமாறியது. ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் வரிசையாக வெளியேறினர். இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ஏழாவது குறைந்த ஒருநாள் போட்டி ஸ்கோரை பதிவு செய்தது.

தோனி இருந்திருந்தால்..

தோனி இருந்திருந்தால்..

தோனி காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், நான்காவது போட்டியில் தோனி இருந்திருந்தால், தன் நிதானமான பேட்டிங் மூலம் அணியை கரை சேர்த்திருப்பார் எனக் கூறி ட்விட்டரில் தோனியை ட்ரென்டிங் ஆக்கினர் அவரது ரசிகர்கள்.

1 ரன்னில் ஆட்டமிழந்தார்

1 ரன்னில் ஆட்டமிழந்தார்

ஆனால், ஐந்தாவது போட்டியில் தோனி 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ட்ரென்ட் பவுல்ட் வீசிய அசத்தல் பந்தை கணிக்கத் தவறிய தோனி, ஸ்டம்ப்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி அசத்தல் ஆண்டு

தோனி அசத்தல் ஆண்டு

தோனி கடந்த ஆண்டு பேட்டிங்கில் பார்ம் இழந்து இருந்தார். இந்த ஆண்டு துவக்கம் முதல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த ஆண்டு இதுவரை ஐந்து போட்டிகளில் பேட்டிங் ஆடியுள்ள அவர், அதில் மூன்று அரைசதம் மற்றும் ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் அடித்து அசத்தலாக செயல்பட்டார்.

ரசிகர்கள் கடும் ஏமாற்றம்

ரசிகர்கள் கடும் ஏமாற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் மட்டும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளார். இதனால், நான்காவது போட்டியின் முடிவில் தோனிக்கு பில்ட்-அப் கொடுத்த அவரது ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Story first published: Sunday, February 3, 2019, 9:45 [IST]
Other articles published on Feb 3, 2019
English summary
India vs Newzealand 5th ODI : Dhoni failed when the fans expected him to bat well
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X