Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs NZ 5th ODI : தோனி அவுட் கேட்ட போது ரன் ஓட ஆசைப்பட்ட நியூசி. வீரர்.. சும்மா விடுவாரா தல?

Recommended Video

ரன் ஓட ஆசைப்பட்ட நியூசி. வீரர்! ரன் அவுட் செய்த டோனி- வீடியோ

வெல்லிங்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது, இந்த போட்டியில் தோனி செய்த ரன் அவுட் ட்ரென்டிங் ஆகி வருகிறது.

தோனி இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், வழக்கம் போல தன் அனுபவத்தை பயன்படுத்தி இந்த ரன் அவுட் மூலம் அணிக்கு திருப்புமுனை அளித்தார். என்ன நடந்தது?

நியூசிலாந்து தடுமாற்றம்

நியூசிலாந்து தடுமாற்றம்

இந்திய அணி நிர்ணயித்த 253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறி வந்தது. அந்த அணி 176 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து இருந்த போது 32 பந்துகளில் 44 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு அச்சுறுத்துலாக விளங்கினார் ஜேம்ஸ் நீஷம்.

அவுட் கேட்டனர்

அவுட் கேட்டனர்

36.2 ஓவரில் ஜாதவ் வீசிய பந்து நீஷம்-இன் காலில் பட்டது. அதற்கு தோனி உட்பட இந்திய வீரர்கள் எல்.பி.டபுள்யூ கேட்டனர். அப்போது பந்து தோனியின் அருகே விழுந்தது. தோனி பந்தை எடுக்க முயன்ற அந்த இடைவெளியில் நீஷம் ரன் ஓட முயன்றார்.

ரன் அவுட் செய்தார் தோனி

ரன் அவுட் செய்தார் தோனி

எதிரில் இருந்த பேட்ஸ்மேன் நீஷம்-ஐ பந்து அருகே தான் உள்ளது என எச்சரித்தார். இதை சரியாக புரிந்து கொள்ளாத நீஷம் ஒரு அடி முன்னே எடுத்து வைத்தார். அதே நேரம் தோனி பந்தை எடுத்து சரியாக த்ரோ செய்து ரன் அவுட் செய்தார்.

இப்படி ஆகிப் போச்சே

இப்படி ஆகிப் போச்சே

"ஒரு ரன் ஓட ஆசைப்பட்டு ஒரு அடி தான் எடுத்து வைச்சோம்.. அதுக்குள்ள இப்படி ஆகிப் போச்சே" என பரிதாபமாக வெளியேறினார் ஜேம்ஸ் நீஷம். அவர் அதிரடி வீரர் என்பதால் இன்னும் சிறிது நேரம் களத்தில் நின்று இருந்தால், போட்டியை நியூசிலாந்து வசம் எடுத்துச் சென்று இருப்பார். தோனி சமயோசிதமாக செயல்பட்டு அவரை வீழ்த்தினார்.

இந்தியா வெற்றி

இந்த போட்டியில் இந்தியா 18 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. எனினும், மிடில் ஆர்டரில் ராயுடு 90, விஜய் ஷங்கர் 45, பண்டியா 45 ரன்கள் எடுத்து இந்தியா 252 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தனர். நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Story first published: Sunday, February 3, 2019, 17:01 [IST]
Other articles published on Feb 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+