Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது எப்ப நடந்துச்சு? சத்தமில்லாமல் தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு!

Recommended Video

தோனி, கோலியை முந்தி சாதனை செய்த அம்பதி ராயுடு- வீடியோ

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அம்பதி ராயுடு இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். இதன் மூலம் அம்பதி ராயுடு சேஸிங்கில் புதிய சாதனை செய்து, தோனியை முந்தியுள்ளார்.

தவான் அதிரடி

தவான் அதிரடி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 156 என்ற இலக்கை நோக்கி ஆடியது. தவான் 75 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். கோலி 45 ரன்கள் அடித்தார். கோலி வெளியேறிய பின் அம்பதி ராயுடு களமிறங்கினார்.

கடைசி வரை நின்ற ராயுடு

கடைசி வரை நின்ற ராயுடு

வெற்றிக்கு மிக குறைந்த ரன்களே தேவை என்ற நிலையில், அம்பதி ராயுடு, தவானுக்கு பேட்டிங் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட ராயுடு 23 பந்துகளில் 13 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாதனை செய்த ராயுடு

சாதனை செய்த ராயுடு

இதன் மூலம் வெற்றிகரமான ரன் சேஸிங்களில் அதிக சராசரி கொண்ட பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தோனி, கோலியை முந்தி அதிரடி சாதனை செய்துள்ளார். தற்போது வெற்றிகரமான சேஸிங்களில் அம்பதி ராயுடு 103.33 சராசரியுடன் முதல் இடத்தில் இருக்கிறார். டாப் 5

டாப் 5 யார்?

டாப் 5 யார்?

அம்பதி ராயுடுவுக்கு அடுத்த இடத்தில் தோனி 103.07 சராசரியுடன் இருக்கிறார். தொடர்ந்து கோலி 96.94, ரஸ்ஸல் அர்னால்ட் 91.00, மைக்கேல் பெவன் 86.25 முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றனர்.

தோனி சாதனை முறியடிப்பு

தோனி சாதனை முறியடிப்பு

தோனி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கோலியை முந்தி இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அந்த சாதனை நடந்த சில தினங்களில் அம்பதி ராயுடு அதை முறியடித்துள்ளார்.

அணியில் இடம் உறுதியா?

அணியில் இடம் உறுதியா?

அம்பதி ராயுடு இந்திய அணியில் ஓரளவு நிலை பெற்றாலும், அவருக்கு சுழற்சி முறையிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தினேஷ், கார்த்திக், கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு ஆகியோர் போட்டிக்கு போட்டி சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனர்.

Story first published: Thursday, January 24, 2019, 12:19 [IST]
Other articles published on Jan 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+