For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முத்தையா முரளிதரன் மாதிரி பண்ணாத!! சாஹலை கலாய்த்த தோனி.. சிரித்த குல்தீப் யாதவ்

Recommended Video

சாஹலை கலாய்த்த தோனி! சிரித்த குல்தீப் யாதவ்- வீடியோ

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி, சாஹலை கலாய்த்து பேசிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தோனி எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு யோசனை கூறுவார். பந்துவீச்சுக்கு ஏற்ற பீல்டிங் நிறுத்தவும் தன் அனுபவத்தின் மூலம் உதவுவார். அதே சமயம் ஸ்டம்ப் மைக்கில் அவர் பேசும் நகைச்சுவைகள் சமயத்தில் இணையத்தை கலக்கும். அப்படி ஒரு காட்சி தான் இப்போது வெளியாகி உள்ளது.

இந்தியா வெற்றி பெற்றது

இந்தியா வெற்றி பெற்றது

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்தியா 252 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும், நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தி விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்தி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சாஹல் பீல்டிங் நிறுத்த அதிக நேரம் எடுத்துக் கொண்ட போது தோனி அவரை கலாய்த்தார்.

ரொம்ப கவலைப்படுறார்

போட்டியின் இடையே ஒரு ஓவரில் சாஹல் பீல்டிங்கில் மாற்றம் சொல்லிக் கொண்டே இருக்க தோனி, தன் அருகே இருந்த குல்தீப் யாதவ்விடம் "சாஹலை பந்து வீசச் சொல். முத்தையா முரளிதரனை விட பீல்டிங் நிறுத்த ரொம்ப கவலைப்படுறார்" எனக் கூறி கலாய்த்தார். இதை கேட்ட குல்தீப் யாதவ் சிரித்து மகிழ்ந்தார்.

ஓவர்கள் முடிக்க விதி

ஓவர்கள் முடிக்க விதி

சர்வதேச போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவு ஓவர்களை வீசி முடிக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், தோனி, சாஹல் பீல்டிங் நிறுத்த அதிக நேரம் எடுத்துக் கொண்டதை சுட்டிக் காட்டி இருக்கலாம்.

ஸ்டம்ப் மைக் சர்ச்சைகள்

ஸ்டம்ப் மைக் சர்ச்சைகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டம்ப் மைக்குகள் மூலம் அருகே நிற்கும் வீரர்கள் பேசுவதை அப்படியே ஒலிபரப்புவது அதிகமாகி வருகிறது. சில சமயம் இது வேடிக்கையாக இருந்தாலும், சில சமயம் சர்ச்சையில் போய் முடிகிறது.

தோனி பேசினால் வைரல்

தோனி பேசினால் வைரல்

ஆனால், தோனி பேசும் பேச்சுக்கள் ஸ்டம்ப் மைக்கில் சிக்கினால் அது நிச்சயம் வைரல் ஆகும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. சாஹலை அவர் கலாய்த்ததும் அந்த வகையில் சேர்ந்து விட்டது.

Story first published: Wednesday, February 6, 2019, 11:32 [IST]
Other articles published on Feb 6, 2019
English summary
India vs Newzealand : Chahal trolled by Dhoni for his fielding placements at the 5h ODI.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+