Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லாராவுடன் சேர்ந்த தவான்.. லாராவை முந்திய கோலி.. நியூசி. போட்டியில் அசத்தல் சாதனைகள்!!

Recommended Video

நியூசி. போட்டியில் கோஹ்லி, தவான் அசத்தல் சாதனைகள்!- வீடியோ

நேப்பியர் : இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் தவான், கோலி இருவரும் முக்கிய மைல்கற்களை எட்டினர்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. தவான் அரைசதம் அடித்தார்.

தவான் 5000 ரன்கள்

தவான் 5000 ரன்கள்

தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் அடித்து இருந்தார். கோலி 45 ரன்கள் அடித்து வெளியேறினார். தவான் இந்த போட்டியில் 5000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்தார். மிக விரைவாக 5000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் நான்காம் இடம் பிடித்து அசத்தியுள்ளார் தவான்.

பிரையன் லாராவின் சாதனை

பிரையன் லாராவின் சாதனை

118 இன்னிங்க்ஸ்களில் 5000 ரன்களை எட்டிய தவான் குறைந்த இன்னிங்க்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில் பிரையன் லாராவுடன் நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இடது கை பேட்ஸ்மேன்களில் இவர்கள் இருவரும் முதல் இடத்தில் இருக்கின்றனர்.

வீரர்கள் பட்டியல்

வீரர்கள் பட்டியல்

ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த இன்னிங்க்ஸ்களில் 5000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் ஹஷிம் அம்லா இருக்கிறார். அவர் 101 இன்னிங்க்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அடுத்து, விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கோலி 114 இன்னிங்க்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி கூட்டாக இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கோலி அசத்தல்

கோலி அசத்தல்

மறுபுறம் கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் பத்து வீரர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இந்த போட்டிக்கு முன்னர் கோலி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவை விட 21 ரன்கள் பின்தங்கி இருந்தார்.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இந்த போட்டியில் 45 ரன்கள் அடித்த கோலி லாராவை முந்தி பத்தாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் டாப் டென்'னில் கோலியுடன் சேர்த்து நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மற்ற இந்திய வீரர்கள் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட்.

Story first published: Wednesday, January 23, 2019, 17:06 [IST]
Other articles published on Jan 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+