
தோனி - பண்ட் பேட்டிங்
இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 159 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வந்தது. இந்திய அணி சிறப்பான துவக்கம் பெற்றது. மூன்று விக்கெட்கள் விழுந்த நிலையில் ரிஷப் பண்ட்டுடன் இணைந்து பேட்டிங் செய்து வந்தார் தோனி.

விக்கெட் வீழ்த்த திட்டம்
அப்போது நியூசிலாந்து அணியின் இஷ் சோதி வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முடிவு செய்து கிரீஸில் இருந்து இரண்டடி தூரம் முன்னேறி நின்றார் தோனி. இதை கணித்த சோதி, தோனியை ஸ்டம்பிங் செய்ய திட்டமிட்டு பந்தை ஸ்டம்பில் இருந்து விலகிச் செல்லுமாறு வீசினார்.
ஏமாந்த விக்கெட் கீப்பர்
இதை சரியாக கணித்த தோனி, ஒற்றைக் கையில் பேட்டிங் செய்து பந்தை ஆஃப்-சைடில் தட்டி விட்டார். தோனி எப்படியும் பந்தை விட்டு விடுவார் என தயாராக இருந்த விக்கெட் கீப்பர் ஏமாந்து போனார்.
ரசிகர்கள் பாராட்டு
ரசிகர்களும் தோனியின் சாமர்த்தியத்தை பாராட்டி வருகின்றனர். ஒரு ரசிகர் ஜீனியஸ், நம்பமுடியவில்லை என கூறி வியந்துள்ளார். தோனிதான் எப்போதும் திட்டமிட்டு பேட்ஸ்மேன்களை வீழ்த்துவார். அவரை அப்படி வீழ்த்த முடியுமா என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

வெற்றிக் கூட்டணி
இந்த போட்டியில் தோனி - ரிஷப் பண்ட் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். தோனி 20, ரிஷப் பண்ட் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி அசத்தல் பேட்டிங்
தோனி இந்த ஆண்டு தொடக்கம் முதல் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் அணிக்கு தேவையான வகையில் ஆடி வருகிறார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்தார் தோனி.


Click it and Unblock the Notifications