
ஓடி வந்த ரசிகர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசியது. அப்போது இடைவேளையில் இந்திய ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வந்தார். அவர் கைகளில் இந்திய மூவர்ணக் கொடி இருந்தது.

விழுந்து வணங்கினார்
அவர் நேராக விக்கெட் கீப்பிங் செய்ய காத்திருந்த தோனி அருகே சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அந்த நேரத்தில் அந்த ரசிகர் கையில் இருந்த தேசியக் கொடி கீழே விழ இருந்தது. அதை கவனித்தார் தோனி.
தேசியக் கொடியை பறித்தார் தோனி
உடனே, அதை அவர் கைகளில் இருந்து பறித்துக் கொண்டார். ஒரு வேளை தோனி அதை தேசியக் கொடியை பறிக்காமல் விட்டிருந்தால், அது அவரது கால்களில் பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. இதை முன் யோசனையுடன் கணித்து தோனி சமயோசிதமாக செயல்பட்டார்.

அதிரடி ஸ்டம்பிங்
தோனி இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், விக்கெட் கீப்பிங்கில் அசத்தினார். அதிரடியாக ஆடி வந்த நியூசிலாந்து வீரர் செய்ஃபர்ட்டின் விக்கெட்டை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டம்பிங் செய்து ஆச்சரியம் அளித்தார்.
ரசிகர்கள் பாராட்டு
தோனி ரசிகர்கள் தோனி பேட்டிங்கில் கை விட்டாலும், தேசியக் கொடிக்கு இழுக்கு ஏற்படாமல் காப்பாற்றியதை பாராட்டி வருகின்றனர். ஒருவர் தோனி லெப்டினன்ட் கலோனல் ஆக இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
விழிப்பாக இருக்கும் தோனி
தோனி எப்போதும் விழிப்பாக இருப்பார். அது ஸ்டம்ப்புக்கு பின்னே ஆக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் ஒருவர்.
பெருமை
எப்போதும் தோனி நம்மை பெருமைப்படுத்தி வருகிறார் என்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications
