For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் தூண் தோனி தான்.. 5வது முறையாக நிரூபித்த “தல”.. எப்படி தெரியுமா?

Recommended Video

இந்திய அணியின் தூண் தோனி தான்! எப்படி தெரியுமா?- வீடியோ

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

தோனி அதிக ரன்கள் அடித்தும் இந்தியா தோல்வி அடைந்த டி20 போட்டிகள் வரிசையில் நியூசிலாந்து முதல் டி20யும் இடம் பெற்றுள்ளது.

நியூசிலாந்து ரன் குவிப்பு

நியூசிலாந்து ரன் குவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது.

இந்தியா ஆல்-அவுட்

இந்தியா ஆல்-அவுட்

அடுத்து சேஸிங் செய்த இந்தியா 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்த போட்டியில் தோனி 31 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்தார். இதுவே இந்த போட்டியின் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்கள்.

பேட்டிங் மோசம்

பேட்டிங் மோசம்

தோனிக்கு அடுத்து தவான் 29, விஜய் ஷங்கர் 27, க்ருனால் பண்டியா 20 ரன்கள் எடுத்தனர். 220 ரன்கள் என்பது டி20 போட்டிகளில் மிக மிகக் கடின இலக்கு என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தனர்.

தூணாக இருக்கும் தோனி

தூணாக இருக்கும் தோனி

இந்த போட்டியோடு சேர்த்து தோனி அதிக ரன்கள் எடுத்தும், இந்திய அணி டி20 போட்டிகளில் தோற்பது ஐந்தாவது முறையாக நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணியை தாங்கிப் பிடிக்கும் தூணாக தோனி இருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம், இந்த போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடியது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

பந்துவீச்சாளர்கள் காரணம்

பந்துவீச்சாளர்கள் காரணம்

முதல் டி20 போட்டியில் இந்தியா படுதோல்வி அடையக் காரணம் பந்துவீச்சாளர்கள் தான். எந்த இந்திய பந்துவீச்சாளரையும் விட்டு வைக்காமல் துவைத்தனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். இதை அடுத்து இமாலய இலக்கு அளித்த அழுத்தம் காரணமாக பேட்டிங்கும் சொதப்பியது.

Story first published: Thursday, February 7, 2019, 12:00 [IST]
Other articles published on Feb 7, 2019
English summary
India vs Newzealand : How many times Dhoni top scored for India in lost T20 matches?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+