Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்பா இப்படி? ஒரு கஷ்டமான கேட்ச் பிடிச்சா.. ரெண்டு ஈஸியான கேட்ச்சை விடும் தினேஷ் கார்த்திக்!

Recommended Video

கஷ்டமான கேட்ச் பிடிச்சா ஈஸியான கேட்ச்சை விடும் தினேஷ் கார்த்திக்!- வீடியோ

வெல்லிங்டன் : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் இரண்டு எளிதான கேட்ச்களை கோட்டை விட்டு வெறுப்பேற்றினார்.

அதே சமயம், ஒரு கடினமான கேட்சை பிடித்து ஆச்சரியம் அளித்தார். இதனால், ஒரே நேரத்தில் ரசிகர்களின் கோபத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறார் தினேஷ் கார்த்திக்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

நியூசிலாந்து அணி முதல் டி20 போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் செய்ஃபர்ட் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இவரை 71 ரன்களில் வெளியேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கேட்ச் நழுவியது

11வது ஓவரில் க்ருனால் பண்டியா பந்துவீச்சில் செய்ஃபர்ட் அடித்த பந்து மேலே சென்றது. தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க தயாராக நின்றார். எனினும், பந்து அவர் கைகளில் இருந்து நழுவிச் சென்றது. மிக எளிதான அந்த கேட்சை கோட்டை விட்டார் தினேஷ்.

சூப்பர் கேட்ச்

அடுத்து 15வது ஓவரில் ஹர்திக் பண்டியா பந்துவீச்சில் சான்ட்னர் சிக்ஸ் அடிக்க முயன்றார். பந்து பவுண்டரி எல்லை அருகே வந்த போது தினேஷ் கார்த்திக் பந்தை பிடித்தார். எனினும், பவுண்டரி கோட்டை தாண்டி விடும் நிலையில் இருந்த அவர் பந்தை மேலே வீசி விட்டு பவுண்டரி எல்லையை தாண்டிச் சென்றார். பின் மீண்டும், எல்லைக்கு உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார்.

2வது கேட்ச் நழுவல்

எனினும், தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு எளிதான கேட்சை கோட்டை விட்டு ரசிகர்களை ஏமாற்றினார். இந்த முறை ராஸ் டெய்லர் அடித்த பந்தை பவுண்டரி எல்லை அருகே இருந்த தினேஷ் கார்த்திக் பிடிக்காமல் நழுவ விட்டார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்தியா பீல்டிங் மட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் மோசமாக சொதப்பியது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்து தெறிக்க விட்டது. இந்திய அணி 139 ரன்கள் மட்டுமே அடித்து 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தினேஷ் கார்த்திக் பேட்டிங்கிலும் அணிக்கு கை கொடுக்கவில்லை. ஆறாவது இடத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Story first published: Wednesday, February 6, 2019, 17:04 [IST]
Other articles published on Feb 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+