Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக்.. மனசுல தோனின்னு நினைப்பா? டீம்ல உங்க இடம் காலி.. ரசிகர்கள் கொதிப்பு!

ஹாமில்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 1 ரன் ஓட மறுத்த விவகாரம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பலரும் தினேஷ் கார்த்திக் என்ன தோனியா? அதிக தன்னம்பிக்கையோடு சிங்கிள் ரன் ஓடாமல், தோனி போல வெற்றி பெற்று கொடுக்கலாம் என நினைத்தாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

3வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 212 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய இந்திய கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது அதிரடியாக பேட்டிங் செய்து வந்த, தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா இருவரும் களத்தில் இருந்தனர்.

முயற்சியில் தோல்வி

முயற்சியில் தோல்வி

தினேஷ் கார்த்திக் 4 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரன் ஓட வாய்ப்பு கிடைத்தும் ஓட மறுத்தார். க்ருனால் பண்டியா அதிரடி வீரர் என்ற நிலையில், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு தராமல் தானே பேட்டிங் செய்து போட்டியை முடித்து வைக்கலாம் என நினைத்த தினேஷ் கார்த்திக், அந்த முயற்சியில் தோல்வி அடைந்தார்.

தினேஷ் செய்த சிறிய தவறு

தினேஷ் செய்த சிறிய தவறு

இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. இதற்கு தினேஷ் கார்த்திக் செய்த இந்த சிறிய தவறு தான் காரணம் என பலரும் அவரை கூறி வருகின்றனர். ரசிகர்கள் பலர் 2012 சிபி சீரீஸ் இறுதிப் போட்டியில் தோனி, அஸ்வினுக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கொடுக்காமல் ரன் ஓட மறுத்தார். அதே போலவே தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் நடந்து கொண்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தோனி என்ன செய்தார்?

தோனி என்ன செய்தார்?

2012 சிபி சீரீஸ் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி இரண்டாவது பந்தில் இரண்டு ஓட வாய்ப்பு இருந்தும், ஒரு ரன் மட்டுமே ஓடி பேட்டிங் ஸ்ட்ரைக்கை தன் வசம் வைத்துக் கொண்டார். அந்த போட்டியில் தோனி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

எதிரில் அதிரடி பேட்ஸ்மேன்

எதிரில் அதிரடி பேட்ஸ்மேன்

தோனி போல இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் நடந்து கொண்டார். ஆனால், எதிரில் நின்றது க்ருனால் பண்டியா என்ற அதிரடி பேட்ஸ்மேன் என்பதை மறந்து விட்டார் என ரசிகர்கள் சாடி வருகிறார்கள்.

தன் இடத்தை இழந்துள்ளார்

தினேஷ் கார்த்திக் எதிரில் இருந்தது பேட்டிங் ஆடத் தெரியாதவர் என முடிவு செய்து விட்டாரா? இந்த தவறான முடிவால் அவர் உலகக்கோப்பை அணியில் தன் இடத்தை இழந்துள்ளார் என கூறியுள்ளார் இந்த ரசிகர்.

ஏன் இப்படி?

தினேஷ் கார்த்திக் தான் தோனி என நினைத்துக் கொண்டார். அது ஓகே. ஆனால், எதிரில் இருந்தது அஸ்வின் என நினைத்து விட்டாரா? என்கிறார் இவர்.

இனிமேல் ஆடக் கூடாது

தினேஷ் கார்த்திக் இனிமேல் இந்திய அணிக்கு ஆடக் கூடாது என கொதித்துள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Monday, February 11, 2019, 13:44 [IST]
Other articles published on Feb 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+