For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“நல்லா ஆடுனாலும் திட்றாங்களே”.. இளம் வீரரை திடீரென குறைக்கூறிய கம்பீர்.. காரணமும் நியாயம் தானே?

மும்பை: இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய வீரர் ஒருவருக்கு கவுதம் கம்பீர் முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 1- 0 என முன்னிலை பெற்றது.

கடைசி நேர சொதப்பல்

கடைசி நேர சொதப்பல்

அந்த போட்டியில் நியூசிலாந்து அணி 165 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டது. ரோகித் சர்மாவின் 48 ரன்கள் மற்றும் சூர்யகுமாரின் அரைசதம் ஆகியவை இந்திய அணியை 15 ஓவர்களில் இலக்கை எட்டும்படி செய்தது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் தோல்வியின் விழிம்புக்கு சென்றது.

சூர்யகுமார் செய்த தவறு

சூர்யகுமார் செய்த தவறு

சுலபமாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அவுட்டானார். அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை இழுத்து சென்றது. கடைசியில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து போட்டியை முடித்துக் கொடுத்தார்.

கம்பீர் கொடுத்த அட்வைஸ்

கம்பீர் கொடுத்த அட்வைஸ்

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இதுபோன்ற முக்கிய போட்டிகளில் இலக்கை துரத்தும் போது சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அடுத்த ஆண்டே மற்றொரு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருப்பதால் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் அடித்து ஆட வேண்டும்.

 தேவை இல்லாத ஒன்று

தேவை இல்லாத ஒன்று

கடந்த போட்டியில் இந்திய அணி முன்கூட்டியே ஆட்டத்தை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் ஆட்டத்தை எப்போதும் முன்கூட்டியே முடிக்க பழகிக்கொள்ள வேண்டும். நல்ல தொடக்க கிடைத்தது என்றால் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு எதிரணியை மிரட்ட வேண்டும்.

கற்க வேண்டும்

கற்க வேண்டும்

சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் அவர் 60 - 70 ரன்கள் அடித்து இருந்தாலும் கடைசியில் ரிஷப் பண்ட் அடித்த நான்கு ரன்கள் தான் போட்டியை மாற்றி அமைத்தது. எனவே இனி வரும் போட்டிகளில் சூரியகுமார் பெரிய ரன்கள் குவிப்பது மட்டுமின்றி போட்டியை முடித்துக்கொடுப்பது எப்படி என்பதனையும் கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Story first published: Friday, November 19, 2021, 18:54 [IST]
Other articles published on Nov 19, 2021
English summary
Gautam gambhir gives advices to the suryakumar yadhav for how finish the game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+