Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி பழசை கிளறி விடுறீங்க? உதாரணம் காட்ட சேவாக் செய்த தவறை இழுத்த கவாஸ்கர்!

மும்பை : இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தன் வர்ணணையின் போது, சேவாக் முன்பு தேவையில்லாமல் டிஆர்எஸ் ரிவ்யூவை வீணாக்கிய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

இந்தியா - நியூசிலாந்து மோதிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசி. வீரர் ஒருவர் டிஆர்எஸ் கேட்க முயன்ற போது கவாஸ்கர் சேவாக் குறித்து பேசினார்.

எல்.பி.டபுள்யூ விக்கெட்

எல்.பி.டபுள்யூ விக்கெட்

இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் சான்ட்னர் தன் எல்.பி.டபுள்யூ விக்கெட் முடிவுக்கு டி.ஆர்.எஸ் கேட்க முடிவு செய்தார். ஆனால், மறுமுனையில் பேட்டிங் செய்து வந்த அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ரிவ்யூ கேட்க வேண்டாம் என கூறி தடுத்து விட்டார்.

கேன் தடுத்தார்

கேன் தடுத்தார்

அம்பயர் முடிவு சரிதான் என்பதை மறுமுனையில் இருந்து கவனித்த கேன், இதை தடுத்து விட்டார். ஆனால், சான்ட்னர் போலவே சேவாக் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாவது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் விக்கெட்டை இழந்த போதும் செய்தார் என கவாஸ்கர் சுட்டிக் காட்டினார்.

சேவாக் எடுத்த முடிவு

சேவாக் எடுத்த முடிவு

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சேவாக்கிற்கு அம்பயர் சரியான எல்பிடபுள்யூ முடிவை கொடுத்தார். சேவாக் சரியா, தவறா என சிறிதும் யோசிக்காமல் ஒரு ரிவ்யூவை வீணாக்கினார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலகக்கோப்பையையும் கைப்பற்றியதை அடுத்து அந்த விவகாரம் பெரிதாகவில்லை. இதை தான் கவாஸ்கர் சுட்டிக் காட்டினார்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

இந்தியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Story first published: Thursday, January 24, 2019, 17:48 [IST]
Other articles published on Jan 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+