Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி இடத்தை பிடித்த தினேஷ் கார்த்திக்.. விஜய் ஷங்கரை வழியனுப்பிய பண்டியா!! #IndVNz

Recommended Video

India vs New Zealand 3rd ODI | தொடரை கைப்பற்றுமா இந்தியா?

மவுன்ட் மௌங்கனி : இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விஜய் ஷங்கர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஹர்திக் பண்டியா அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது. பண்டியா அணியில் சேர்ந்துள்ளதால், அணி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனிக்கு பதில் விக்கெட் கீப்பர் யார்?

தோனிக்கு பதில் விக்கெட் கீப்பர் யார்?

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தோனி தசைப் பிடிப்பு காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை.

பண்டியா உள்ளே

பண்டியா உள்ளே

அதே போல முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெற்ற விஜய் ஷங்கருக்கு மூன்றாவது போட்டியில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக இடை நீக்கத்தில் இருந்து மீண்டு அணியில் சேர்ந்த பண்டியா களம் காண்கிறார்.

மாற்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்

மாற்று விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்

உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக நியூசிலாந்து தொடரில் இந்தியா அணித் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இருக்கும் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பைக்கு முன் தன் விக்கெட் கீப்பிங் திறமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் ஷங்கர் வாய்ப்பு

விஜய் ஷங்கர் வாய்ப்பு

விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியிலும், நியூசிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் இடம் பிடித்தாலும், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

பேட்டிங் வாய்ப்பு இல்லை

பேட்டிங் வாய்ப்பு இல்லை

விஜய் ஷங்கர் தனக்கு கிடைத்த பந்து வீசும் வாய்ப்புகளிலும், விக்கெட்கள் வீழ்த்தவில்லை. அவர் ஆல்-ரவுண்டர் என்றாலும் பேட்டிங் தான் அவரது முதன்மையான பணி. ஆனால், பேட்டிங் வாய்ப்பு கிடைக்காததால் உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் இடம் பெறுவது கடினமே.

பண்டியா சோர்ந்து விட்டாரா?

பண்டியா சோர்ந்து விட்டாரா?

பண்டியா இடை நீக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதனால், மனதளவில் அவர் சோர்ந்து போகாமல் இருக்கிறாரா என பார்ப்பது மிகவும் முக்கியம். அதே போல, தோனிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து அவர் விரைவில் மீண்டு வருவாரா என்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

Story first published: Monday, January 28, 2019, 8:33 [IST]
Other articles published on Jan 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+